Dailyhunt
தவெகவின் முதல் வெற்றி...  திமுக கோட்டையில் விழுந்த முதல் ஓட்டை.. தூத்துக்குடியில் விஜயின் நண்பர் ஸ்ரீநாத் வெற்றி

தவெகவின் முதல் வெற்றி... திமுக கோட்டையில் விழுந்த முதல் ஓட்டை.. தூத்துக்குடியில் விஜயின் நண்பர் ஸ்ரீநாத் வெற்றி

ABP Nadu 6 days ago

மிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணி தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டதை தொடர்ந்து, வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் யாரும் எதிர்பார்க்க விதமாக தவெக 101 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. அதிமுக 78 இடங்களில் இரண்டாவது இடத்திலும், திமுக 55 இடங்களில் முன்னிலையிலும் இருக்கிறது.

இந்த நிலையில், சட்டமன்றத் தேர்தலில் தவெக முதல் வெற்றியை பெற்றுள்ளது. தூத்துக்குடியில் தவெகவின் சார்பில் போட்டியிட்ட விஜயின் நண்பர் ஸ்ரீநாத் வெற்றி பெற்றுள்ளார். அமைச்சர் கீதா ஜீவனை 18856 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னுக்கு தள்ளி வெற்றி பெற்றார்.

Author : ராஜேஷ். எஸ்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu