திருப்பத்தூரில் தவெகவின் வெற்றியை கொண்டாட சாலையில் அட்ராசிட்டி செய்த தவெகவினரை ராணுவத்தினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று 2026 சட்டமன்ற தேர்தலின் வாக்கு பதிவு நடைபெற்றது. திருப்பதிக்கு அதிமுகவில் சீட் கிடைக்காததால் விலகி தமிழக வெற்றிக் கழகத்தில்
இணைந்து திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இதனை கொண்டாடும் விதமாக தவெகவினர் சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாக நடனமாடி அட்ரா சிட்டியில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து, திருப்பத்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற திருப்பதியை வரவேற்கும் விதமாக கூட்டம் கூட்டமாக குவிந்தனர். போலீசார் தடுத்து நிறுத்திய போது தவெகவினருக்கும் போலீசருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ராணுவத்தினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.


