Dailyhunt
Thanjavur Election Result: தஞ்சாவூர் கோட்டையைத் தட்டித் தூக்கும் தவெக! - 6 தொகுதிகளைத் தக்கவைத்த திமுக

Thanjavur Election Result: தஞ்சாவூர் கோட்டையைத் தட்டித் தூக்கும் தவெக! - 6 தொகுதிகளைத் தக்கவைத்த திமுக

ABP Nadu 1 week ago

ஞ்சாவூர் மாவட்டத்தில் ஆறு தொகுதிகளில் திமுக முன்னிலை வகித்து வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் முன்னிலை விவரம்

திருவையாறு, திருவிடைமருதூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு ஆகிய 6 தொகுதிகளில் திமுக முன்னிலை வகிக்கிறது. பாபநாசம் தொகுதியில் அதிமுகவும், தஞ்சாவூர் தொகுதியில் தவெகவும் முன்னிலை வகிக்கிறது.

தஞ்சாவூர் தொகுதி 11வது சுற்று முடிவில்

12,285 வாக்குகள் கூடுதலாக பெற்று தமிழக வெற்றி கழக வேட்பாளர் முன்னிலை

திருவையாறு தொகுதி ஆறாவது சுற்ற முடிவில் 4533 வாக்குகள் கூடுதலாக பெற்று திமுக முன்னிலை

ஒரத்தநாடு தொகுதி ஆறாவது சுற்று முடிவில் 5890 வாக்குகள் கூடுதலாக பெற்று திமுக முன்னிலை

திருவையாறு தொகுதி 7வது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் 5890 வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளார்

பாபநாசம் தொகுதி

ஆறு சுற்று முடிவில்

அதிமுக -2457
திமுக ( இந்திய முஸ்லிம் லீக் ) -2992
தவெக -3146
நாதக -573

ஆறு சுற்று முடிவில் தமிழக வெற்றி கழகம் பாபநாசத்தில் முன்னிலை

கும்பகோணம் தொகுதி

ஏழாவது சுற்று முடிவில்

அதிமுக (தமாக)-2087
திமுக -3227
தவெக -2842
நாதக -313

பேராவூரணி சட்டப்பேரவை தொகுதியில் 5 வது சுற்று முடிவில் அதிமுக முன்னிலை

பேராவூரணி சட்டப்பேரவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையில் 5 வது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் கோவி.இளங்கோ முன்னிலை வகித்து வருகிறார்.

பேராவூரணி தொகுதியில் 5 வது சுற்றில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம்.
தி.மு.க-
(என்.அசோக்குமார்): 2542
அ.தி.மு.க
( கோவி.இளங்கோ) : 3587
த.வெ.க -
( சந்திரகாண்டீபன் ) : 1990
நா.த.க-
( புவனா ) : 433
ஆகியோர் வாக்குகள் பெற்றுள்ளனர்.

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணி தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டதை தொடர்ந்து, வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன். தமிழக சட்டமன்றத் தேர்தலில் யாரும் எதிர்பார்க்க விதமாக தவெக 109 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. அதிமுக 68 இடங்களில் இரண்டாவது இடத்திலும், திமுக 57 இடங்களில் முன்னிலையிலும் இருக்கிறது.

Author : என்.நாகராஜன்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu