Thanjavur power cut 08.07.2026: தஞ்சாவூர்: "காலையில எழுந்ததும் முதல்ல என்ன பண்ணுவோம்? சிலர் காபி போடுவாங்க...
சிலர் மொபைல் பார்க்குவாங்க... இன்னும் சிலர், 'கரண்ட் இருக்கா?'ன்னு சுவிட்சை ஆன் பண்ணுவாங்க! ஆனால் நாளை 08.07.2026 தஞ்சையின் பல பகுதிகளில் அந்த சுவிட்ச் கொஞ்ச நேரம் அமைதியாகத்தான் இருக்கும்."
தஞ்சாவூர் மக்களே... நாளைய திட்டத்தை இப்போதே கொஞ்சம் மாற்றிக்கொள்ளுங்கள். "மொபைல் சார்ஜ் பண்ணணும்... தண்ணீர் மோட்டார் ஓடணும்... வாஷிங் மெஷின் போடணும்..." என்று நினைத்திருந்தால், இன்று இரவே முடித்துவிடுவது நல்லது. காரணம், தஞ்சாவூர் மணிமண்டபம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், நாளை ஜூலை 8-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.
உதவி செயற்பொறியாளர் எம். விஜய் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அருளானந்த நகர், பிலோமினா நகர், காத்தூன் நகர், சிட்கோ, அண்ணா நகர், காமராஜ் நகர், பாத்திமா நகர், அன்பு நகர், திருச்சி ரோடு வஉசி நகர், பூக்கார தெரு, 20 கண்பாலம், கோரி குளம், கணபதி நகர், ராஜப்பா நகர், மகேஸ்வரி நகர், திருப்பதி நகர், செல்வம் நகர், அண்ணாமலை நகர், ஜெ.ஜெ. நகர், டி.பி.எஸ். நகர், சுந்தரம் நகர், பாண்டியன் நகர், இபி ஆபிஸ்.
கலெக்டர் பங்களா ரோடு, டேனியல் தாமஸ் நகர், ராஜராஜேஸ்வரி நகர், தென்றல் நகர், துளசியாபுரம், தேவன் நகர், பெரியார் நகர், இந்திரா நகர், கூட்டுறவு காலனி, நடராஜபுரம் தெற்கு, புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, எலிசா நகர், நட்சத்திர நகர், வி.பி. கார்டன், ஆர்.ஆர். நகர், சேரன் நகர், காவேரி நகர், நிர்மலா நகர், யாகப்பா நகர், அருளானந்த அம்மாள் நகர், குழந்தை இயேசு கோயில், பிஷப் காம்ப்ளக்ஸ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.
இந்த 8 மணி நேரத்தை "கரண்ட் இல்லை" என்று புலம்புவதற்குப் பதிலாக, கொஞ்சம் திட்டமிட்டு பயன்படுத்திக்கொள்ளலாம். மொபைல், லேப்டாப், பவர் பேங்க் ஆகியவற்றை முன்கூட்டியே சார்ஜ் செய்து வைத்துக்கொள்ளுங்கள். குடிநீரை சேமித்து வையுங்கள். வீட்டில் வயதானவர்கள், குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளையும் செய்து கொள்ளுங்கள்.
இன்னொரு முக்கிய விஷயம்... மின்சாரம் வந்தவுடன் எல்லா மின்சாதனங்களையும் ஒரே நேரத்தில் இயக்காமல், சிறிது இடைவெளியுடன் பயன்படுத்தினால் பாதுகாப்பாக இருக்கும்.
அதோடு ஒரு சின்ன வேண்டுகோள்... நாளை காலை 9 மணிக்கு பிறகு சுவிட்சை பத்து தடவை ஆன்-ஆஃப் பண்ணி "கரண்ட் வந்தாச்சா?"ன்னு சோதனை பண்ணாதீங்க! பராமரிப்பு பணி நடக்கும் நேரம் அது. கொஞ்சம் பொறுமையாக இருந்தால், மாலைக்குள் மின்சாரம் வழக்கம்போல் திரும்பிவிடும்.
எனவே, நாளைய மின்தடையை மனதில் வைத்து உங்கள் அன்றாட பணிகளை இன்றே திட்டமிடுங்கள். இந்த தகவலை உங்கள் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அக்கம் பக்கத்தினருக்கும் பகிருங்கள். ஒரு சிறிய முன்னெச்சரிக்கை, நாளைய சிரமத்தை குறைக்கும். அதனால மறக்காம நாளை மின்தடை என்பதை செல்போனில் அலார்ட் மெசேஜ் வைத்து கவனமாக இருங்க பாஸூ. அப்போதான் சிரமத்துல சிக்காம எஸ்கேப் ஆகலாம். என்ன இப்பவே சார்ஜ் போட ரெடியாகிட்டீங்களா?
Author : என்.நாகராஜன்

