Dailyhunt
திண்டுக்கல்: கனிமொழி வாக்குறுதிகள்! செம்மொழி பூங்கா, மேம்பாலம், குடிநீர் திட்டம் - எதிர்பார்ப்பில் மக்கள்!

திண்டுக்கல்: கனிமொழி வாக்குறுதிகள்! செம்மொழி பூங்கா, மேம்பாலம், குடிநீர் திட்டம் - எதிர்பார்ப்பில் மக்கள்!

ABP Nadu 2 weeks ago

திண்டுக்கல்லில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும்,5,400கோடி மதிப்பீட்டில் காவேரி ஆற்றில் இருந்து உபரி நீர் கொண்டுவரப்பட்டு ஏரி குளங்கள் கண்மாய்கள் நிரப்பி நிலத்தடி நீர் மேம்படுத்தப்படும்.

போக்குவரத்து நெரிசலை சரி செய்ய பழனி சாலையில் மேம்பாலச்சாலை அமைக்கப்படும். திண்டுக்கல்லில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கனிமொழி எம்பி பேச்சு.

திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் செந்தில்குமாரை ஆதரித்து நாகல் நகர் பாரதிபுரத்தில் கனிமொழி எம்பி வேனில் இருந்தவாறு பிரச்சார மேற்கொண்டார். கனிமொழியின் பேச்சைக் கேட்க ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர். அவர்கள் மத்தியில் பேசுகையில், திண்டுக்கல்லில் முதன்முறையாக செந்தில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கிறார். பழனி சட்டமன்ற உறுப்பினராக செந்தில்குமார் சிறப்பாக செயல்பட்டு வந்தார்.

அவர் சட்டமன்ற தொகுதியில் மக்களைப் பற்றியும், பிரச்சினை பற்றி அதை எப்படி சரி செய்ய வேண்டும் என்பதை பற்றி ஆழ்ந்த அக்கறையும், தெளிவும் இருப்பவர் நமது வேட்பாளர் செந்தில்குமார். இத்தனை நாள் பழனியில் பாடுபட்டது போதும். தற்போது, இப்பகுதி மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்று நமது முதலமைச்சர் நியமித்து இருக்கிறார்கள். வேட்பாளர் செந்தில்குமாருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

உங்களிடம் நாங்கள் உரிமையோடு வாக்கு கேட்கிறோம். கடந்த சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி தந்துள்ளோம். என்ற, பெருமிதத்தோடு வாக்கு கேட்கிறோம் என்றார். மேலும் அவர் பேசுகையில் , வைகை அணையில் இருந்து திண்டுக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் விரைந்து முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும். தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில் கயார் மற்றும் நார் தொழில் சங்கம் அமைக்கப்படும். பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் திண்டுக்கல் பேருந்து நிலையம் தரம் உயர்த்தப்படும்.

திண்டுக்கல்லில் செம்மொழி பூங்கா உருவாக்கப்படும். வேப்பந்தோப்பு முதல் பழனி சாலை வரை புதிய மேம்பாலம் கட்டப்படும். திண்டுக்கல்லில் கூட்டு தொழிலுக்கான குழுமங்கள் உருவாக்கப்படும். காவேரி ஆற்றில் இருந்து 5,400 கோடி மதிப்பீட்டில் உபரி நீர் கொண்டு வரும் திட்டம் நிறைவேற்றப்படும் இதைக் கொண்டு திண்டுக்கல் ஊராட்சி பகுதிகளில் உள்ள குளங்களில் தண்ணீர் நிரப்பப்படும் என பேசினார்.

Author : நாகராஜ்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu