Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
திருத்தணி பயணிகளே கவனிங்க! ஜூலை 13 முதல் முற்றிலும் தடை செய்யப்படுகிறது! பொதுமக்களே உஷார்!

திருத்தணி பயணிகளே கவனிங்க! ஜூலை 13 முதல் முற்றிலும் தடை செய்யப்படுகிறது! பொதுமக்களே உஷார்!

ABP Nadu 3 months ago

Tiruttani Traffic Update: திருத்தணி நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பொதுமக்களின் வசதிக்காகவும் புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், பழைய பேருந்து நிலையம் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை நகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

திருத்தணி பழைய பேருந்து நிலையத்தில் வரும் 13-ம் தேதி முதல் பேருந்துகள் நின்று செல்லாது என்று நகராட்சி கமிஷனர் கன்னியப்பன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். எனவே பொதுமக்கள் தங்கள் பயணத்தை அதற்கேற்றவாறு திட்டமிட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

ரூ.21 கோடியில் புதிய பேருந்து நிலையம் - Tiruttani New Bus Stand

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனை அருகில், நான்கு ஏக்கர் பரப்பளவில், சுமார் 21 கோடி ரூபாய் மதிப்பில் அதிநவீன வசதிகளுடன் புதிய பேருந்து நிலையம் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய பேருந்து நிலையம் கடந்த மார்ச் மாதம் 4-ம் தேதி முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்பட்டு, தற்போது செயல்பட்டு வருகிறது.

பழைய பேருந்து நிலையத்தால் எழுந்த சிக்கல் - Tiruttani Old Bus Stand

புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, பேருந்துகள் அனைத்தும் அங்கிருந்து புறப்பட்டு, பழைய பேருந்து நிலையத்திற்கு வந்து, அங்குள்ள பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்ல வேண்டும் என்று வழிவகை செய்யப்பட்டிருந்தது. ஆனால், சில தனியார் பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்திற்குச் செல்லாமல், நேரடியாகப் பழைய பேருந்து நிலையத்திற்கே வந்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றன. இதனால் பயணிகள் பலரும் புதிய பேருந்து நிலையத்திற்குச் செல்லாமல் பழைய பேருந்து நிலையத்தையே நாடும் நிலை ஏற்பட்டது. இது புதிய பேருந்து நிலைய உருவாக்கத்தின் நோக்கத்தையே பாதிப்பதாக அமைந்தது.

ஜூலை 13 முதல் புதிய போக்குவரத்து மாற்றம் Tiruttani Bus Stand Changes

இந்தக் குளறுபடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நகராட்சி கமிஷனர் கன்னியப்பன் புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அதன்படி, வரும் 13-ம் தேதி முதல் அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் புதிய பேருந்து நிலையத்திலிருந்தே இயக்கப்படும். பழைய பேருந்து நிலையத்தில் இனி எந்தவொரு பேருந்தும் நிற்காது.

வெளியூர்களில் இருந்து திருத்தணிக்குள் வரும் அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளும், வரும் போது திருத்தணி மார்க்கமாகவும், நகரை விட்டு வெளியே செல்லும் போது புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறவழிச் சாலை (By-pass road) வழியாகவும் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பழைய பேருந்து நிலையத்தில் பேருந்துகள் நிற்பதைத் தடுக்கும் வகையில் அங்கு தடுப்புகள் (Barricades) அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் வேண்டுகோள்

இந்த அதிரடி போக்குவரத்து மாற்றம் குறித்து திருத்தணி நகர வியாபாரிகள் மற்றும் கடைக்காரர்களுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் 'நோட்டீஸ்' விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், திருத்தணி நகராட்சி முழுவதும் ஆட்டோக்கள் மூலம் ஒலிபெருக்கி வாயிலாகப் பொதுமக்களுக்குத் தொடர் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நகரின் போக்குவரத்து மேம்பாட்டிற்காக மேற்கொள்ளப்படும் இந்த மாற்றத்திற்குப் பயணிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று நகராட்சி கமிஷனர் கன்னியப்பன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Author : கிஷோர்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu