Dailyhunt
TN BJP Election Manifesto: ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம்; விவசாயிகளுக்கு ரூ.19 ஆயிரம்- வாக்குறுதிகளை அள்ளி வீசிய தமிழக பாஜக

TN BJP Election Manifesto: ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம்; விவசாயிகளுக்கு ரூ.19 ஆயிரம்- வாக்குறுதிகளை அள்ளி வீசிய தமிழக பாஜக

ABP Nadu 3 weeks ago

பாஜக தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்களாக, போதைப்பொருளை தடுக்க தனி அமைச்சகம்; போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு NDPS சட்டத்தின் கீழ் மரண தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணியில் பாஜக இணைந்து தமிழக 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்கிறது. இந்த நிலையில், தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் முன்னாள் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா வெளியிட்டார். தாமரை வாக்குறுதி என்ற பெயரில் பாஜக சட்டமன்றத் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது

அதன் முக்கிய அம்சங்கள்:

  1. குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ₹2,000 உதவித்தொகை மற்றும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ₹10,000 நிதியுதவியாக ஒருமுறை வழங்கப்படும்.
  2. ஆண்டுக்கு 3 விலையில்லா கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும். அவை பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தீபாவளி பண்டிகைகள் பொழுது வழங்கப்படும்.
  3. பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஒழிக்கப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்போம். இதற்காகத் தடையற்ற 'ஜீரோ-எப்ஐஆர்' (Zero-FIR) பதிவுமுறை, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளருக்கான பாதுகாப்பு, பாலியல், போக்ஸோ குற்றங்கள் உள்ளிட்ட கொடூரமான வழக்குகளை விசாரிக்க சிறப்பு விரைவு நீதிமன்றங்கள், பேருந்துகள், பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் 100% கண்காணிப்பு கேமரா (CCTV) வசதி மற்றும் 'நிர்பயா' நிதியை முழுமையாகப் பயன்படுத்துவது ஆகியவற்றை உறுதி செய்வோம்.
  4. பெண்கள் தலைமையிலான கூட்டுறவு சங்கங்கள், சுயஉதவிக் குழுக்கள் மற்றும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு (MSME), உற்பத்தி அலகுகளை அமைக்க ₹50 லட்சம் வரை வட்டி இல்லாக் கடன்கள் வழங்கப்படும். மேலும், அரசின் கொள்முதலில் பெண்களுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு 20% இட ஒதுக்கீடு (Procurement Quota) கட்டாயமாக்கப்படும்.
  5. முருகப் பெருமானின் பெருமையைப் போற்றும் வகையில், தைப்பூசத் திருநாளை மாநில விழாவாக அறிவிப்போம்.
  6. திருப்பரங்குன்ற மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றும் பாரம்பரியம் மீண்டும் தொடங்கப்படுவதையும், அது காலம் முழுவதும் பாதுகாக்கப்படுவதையும் உறுதி செய்வோம்.
  7. போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்க, சிறப்பு போதைப்பொருள் தடுப்புப் படை பிரிவுடன் கூடிய 'தமிழக போதைப்பொருள் ஒழிப்புத் துறை' உருவாக்கப்படும். கடல்வழி கடத்தலைத் தடுக்க 'கடலோர போதைப்பொருள் புலனாய்வுப் பிரிவு', துரித நடவடிக்கைக்காக பிரத்யேக உதவி எண், சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும். மேலும், மீண்டும் குற்றம் செய்வோர் மற்றும் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு NDPS சட்டத்தின் கீழ் மரண தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  8. 'உழவே தலை' திட்டத்தைத் தொடங்கி, பிஎம்-கிசான் நிதியுதவியுடன் மாநில அரசின் பங்காக ₹3,000 கூடுதலாக வழங்கி, ஆண்டுக்கு மொத்தம் 19,000 நிதியுதவி வழங்குவோம். மேலும், மாநிலக் கூட்டுறவு பருத்தி உற்பத்தியாளர்கள் சங்கம் அமைக்கப்பட்டு, 100 की. தொலைவிற்குள் பருத்தி அரைக்கும் ஆலைகள் (Ginning Mills) நிறுவப்படும். அத்துடன் மரவள்ளிக்கிழங்கு, தக்காளி, மாம்பழம், வாழை மற்றும் மிளகாய் ஆகிய பயிர்களுக்கு உறுதி அளிக்கப்பட்ட சந்தை ஆதரவு வழங்கப்படும்.
  9. தமிழ்நாட்டின் 10 நகரங்களை தேசத்தின் முதல் 100 தூய்மையான நகரங்கள் பட்டியலில் இடம்பெறச் செய்வோம்.
  10. 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை எதிர்காலத்திற்குத் தயார்படுத்தும் வகையில், ஒவ்வொரு வட்டார வள மையத்திலும் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ரோபாட்டிக்ஸ் (Robotics) துறைகளில் செய்முறைப் பயிற்சிகளுடன் கூடிய பிரத்யேக வாராந்திரப் பயிற்சி வகுப்புகள் வழங்கப்படும்.
  11. முதன்முறை தொழில் தொடங்கும் 2,000 இளைஞர்களுக்கு 5 ஆண்டு காலத்திற்கு 15 லட்சம் வரை வட்டியில்லா சுடன், ஜிஎஸ்டி (GST) தொடர்பான சலுகைகள் மற்றும் மானியங்கள் வழங்கப்படும்.
  12. மின்சார இருசக்கர வாகனங்கள் (e-scooters) வாங்குவதற்குத் தகுதியுள்ள பெண்களுக்கு 125,000 மானியம் வழங்கப்படும்.
  13. தமிழக நாட்டுப்புறக் கலைகள் மற்றும் கோவில் மரபுகளைப் பாதுகாக்கும் வகையில், 'திருக்கோவில் நித்ய பூஜை தொகுப்புத் திட்டம்' செயல்படுத்தப்படும். இதன் மூலம் மாதந்தோறும் அத்தியாவசியப் பொருட்கள் (கற்பூரம், நெய்/எண்ணெய், 60 கிலோ அரிசி, குங்குமம், மஞ்சள், விபூதி), ஒருமுறை வழங்கப்படும். கோயில் உபகரணங்கள் (கோயில் மணி, தாம்பூலம், ஆர்த்தி தட்டுகள், வேட்டித் தொகுப்பு) மற்றும் கோவில் திருவிழாக்கள் மற்றும் பராமரிப்பிற்காக ஆண்டுக்கு 25,000 நிதியுதவி வழங்கப்படும்.

இவ்வாறு தமிழக பாஜக தெரிவித்துள்ளது.

Author : க.சே.ரமணி பிரபா தேவி

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu