Dailyhunt
TN Election 2026: "அதிமுகவினருக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.. திமுகவின் வெற்றி உறுதி" அடித்து சொன்ன கனிமொழி

TN Election 2026: "அதிமுகவினருக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.. திமுகவின் வெற்றி உறுதி" அடித்து சொன்ன கனிமொழி

ABP Nadu 3 days ago

தேர்தல் நேரத்திலேயே வன்முறையில் ஈடுபடுகிறார்கள் என்றால் அதிமுகவினருக்கு பொதுமக்கள் பாடம் புகட்டுவார்கள் என திமுக கழக துணைப் பொதுச் செயலாளரும் எம்.யியுமான கனிமொழி விமர்சித்து பேசியுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதியில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில், திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கவிதா தண்டபாணியை ஆதரித்து, திமுக கழக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி, புதுப்பேட்டை சந்தை மைதானத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்,
அப்போது செய்தியாளர்களை சந்தித்த திமுக கழக துணை பொது செயலாளர் கனிமொழி செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில் திமுகவின் வெற்றி வாய்ப்பு மிக சிறப்பாக உள்ளது.தமிழக மக்கள் முதல்வர் ஸ்டாலினின் ஐந்தாண்டு சாதனையை உணர்ந்தவர்களாக இருக்கின்றனர்.அனைத்து திட்டங்களும் எல்லா வீட்டிற்க்கும் சென்றடைந்துள்ளது அடுத்த முறையும் திமுக ஆட்சிதான் வரவேண்டும் என மக்கள் கருதுகின்றனர் எனக் கூறினார்

அதனைத் தொடர்ந்து நேற்று நாட்றம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் கேசி வீரமணி ஆதரவாளர்கள் இருவர் மீது தாக்குதல் நடத்தியது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு , தேர்தல் நேரத்திலே வன்முறையில் ஈடுபடுகிறார்கள் என்றால் அதிமுகவினருக்கு பொதுமக்கள் பாடம் புகட்டுவார்கள்.எதிர்க்கட்சியினர் தற்போது இயலாமையில் உள்ளனர்.

அவங்களுக்கே தெரியும் வெற்றி வாய்ப்பு இல்லையென்று எந்த பொய் வேண்டுமானாலும் சொல்லலாம் என்ற இடத்திற்கு அதிமுகவினர் வந்துள்ளனர் என கூறினார். அதனைத் தொடர்ந்து திமுகவினர் தேர்தல் வாக்குறுதியாக பொது மக்களுக்கு 8000 ரூபாய் டோக்கன் கொடுப்பதாக கூறியிருந்த நிலையில் அது குறித்து அதிமுகவினர் அதிலேயும் திமுகவினர் கமிஷன் அடிப்பாங்க என்று கூறி வருகின்றனர் என்ற செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்த கனிமொழி நாங்க நேரடியாக 8000 ரூபாய் டோக்கனை பொதுமக்களுக்கு கொடுக்கப் போகிறோம் அவர்கள் நேரடியாக சென்று கடையில் அதற்கு உண்டான பொருட்களை வாங்க போறாங்க இதுல போய் எப்படி கமிஷன் எடுக்க முடியும் என்றார், வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெறுவது உறுதி என கூறினார்.

Author : ஜேம்ஸ்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu