Dailyhunt
TN Election Results 2026: 234 தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் - தவெக, திமுக, அதிமுக வாக்கு சதவிகிதம் - முழு விவரங்கள்

TN Election Results 2026: 234 தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் - தவெக, திமுக, அதிமுக வாக்கு சதவிகிதம் - முழு விவரங்கள்

ABP Nadu 5 days ago

Tamilnadu Election Result 2026: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அரசியல் கட்சிகள் பெற்ற வாக்கு சதவிகிதத்தின் விவரங்கள் குறித்து அறியலாம்.

தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்த தவெக

உச்சகட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடுமையான மும்முனை போட்டியாக அரங்கேறிய, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, முதல்முறையாக தேர்தல் களத்தை எதிர்கொண்ட விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்துள்ளது. இதன் முலம் கடந்த 60 ஆண்டுகளில் முதல் முறையாக திராவிட கட்சிகள் தலைமையில் இல்லாத ஒரு ஆட்சி தமிழ்நாட்டில் அமைய உள்ளது. ஆளுங்கட்சியான திமுக 59 இடங்களில் மட்டுமே வென்று இரண்டாவது இடத்திற்குச் செல்ல, பிரதான எதிர்க்கட்சியான அதிமுக 47 இடங்களை பிடித்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகள் வென்ற தொகுதிகள், வாக்கு சதவிகிதம்:

கட்சிகள்போட்டியிட்ட தொகுதிகள்வென்ற இடங்கள்வாக்கு சதவிகிதம் (%)
தமிழக வெற்றிக் கழகம்23310834.92
திமுக (உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கட்சிகள் உட்பட)1765924.19
காங்கிரஸ்2853.37
தேமுதிக1011.20
விசிக811.09
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்520.60
இந்திய கம்யூனிஸ்ட்520.66
இந்திய யூனியன் முஸ்லீம் லீக்220.29%
அதிமுக (இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட கட்சிகள் உட்பட)1704721.21
பாஜக (தாமரை சின்னத்தில் போட்டியிட்ட கட்சிகள் உட்பட)3512.97
பாமக184
அமமுக111
நாம் தமிழர் கட்சி234

திராவிட கட்சிகள் ஷாக்:

கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக மட்டுமே 133 இடங்களில் வென்று தனிப்பெருங்கட்சியாக, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. ஆனால், இந்த முறை கூட்டணியாக சேர்ந்து கூட ஆட்சியை கைப்பற்ற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் கடந்த முறை வென்ற தொகுதிகளில் பாதியை கூட இந்த முறை திமுகவால் வெல்ல முடியவில்லை. அதிமுகவின் வீழ்ச்சி என்பது பத்து தோல்வி பழனிசாமி என்ற நிலையை, பதினோறு தோல்வி எடப்பாடி எனும் மோசமான நிலைக்கு மாற்றியுள்ளது.

2021 சட்டமன்ற தேர்தல் முடிவுகள்:

  • திராவிட முன்னேற்றக் கழகம் - 133 தொகுதிகளில் வெற்றி
  • அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் - 66 இடங்கள்
  • காங்கிரஸ் - 18 தொகுதிகளில் வெற்றி
  • பாரதிய ஜனதா கட்சி - 4 இடங்களில் வெற்றி
  • பாட்டாளி மக்கள் கட்சி - 5 இடங்களில் வெற்றி
  • விடுதலை சிறுத்தைகள் கட்சி - 4 தொகுதிகளில் வெற்றி
  • இந்திய கம்யூனிஸ்ட் - 2 தொகுதிகளில் வெற்றி
  • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 2 தொகுதிகளில் வெற்றி

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கடந்த தேர்தலில் 45.38 சதவிகித வாக்குகளை பெற்றது. ஆனால் இந்த முறை அது வெறும் 32 சதவிகிதத்திற்கும் குறைவாக சரிந்துள்ளது. அதேநேரம், கடந்த முறை தேசிய ஜனநாயக கூட்டணி சுமார் 39.71 சதவிகித வாக்குகளை பெற்று இருந்தது. இந்த முறை அது வெறும் 25 சதவிகிதத்திற்கும் குறைவாக சுருங்கியுள்ளது.

Author : குலசேகரன் முனிரத்தினம்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu