Dailyhunt
TN Election Results 2026: மதுரையில் சூடுபிடிக்கும் தேர்தல்களம்.. முன்னிலை நிலவரம் என்ன?

TN Election Results 2026: மதுரையில் சூடுபிடிக்கும் தேர்தல்களம்.. முன்னிலை நிலவரம் என்ன?

ABP Nadu 1 week ago

துரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான 5 வாக்கு எண்ணிக்கை மையங்களில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

தேர்தல் 2026

மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர், மதுரை கிழக்கு, சோழவந்தான், மதுரை வடக்கு ,மதுரை தெற்கு, மதுரை மத்தியம், மதுரை மேற்கு ,திருப்பரங்குன்றம் திருமங்கலம் ,உசிலம்பட்டி ஆகிய 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த 23ஆம் தேதி முடிவடைந்தது. இந்நிலையில் 10 சட்டமன்றத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் 5 வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணும் மையம்

மதுரை கிழக்கு, மேலூர் ஆகிய தொகுதிகளுக்கு ஒத்தக்கடை வேளாண்மை கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்திலும், சோழவந்தான், உசிலம்பட்டி ஆகிய தொகுதிகளுக்கு கீழகுயில்குடி அண்ணா பல்கலைக்கழகம் வாக்கு எண்ணிக்கை மையத்திலும், மதுரை வடக்கு மற்றும் மதுரை தெற்கு ஆகிய தொகுதிகளுக்கு தியாகராசர் பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்திலும், மதுரை மத்தியம், மதுரை மேற்கு ஆகிய தொகுதிகளுக்கு மதுரை கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்திலும், திருப்பரங்குன்றம், திருமங்கலம் தொகுதிகளுக்கு கப்பலூர் அரசு கலைக் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்திலும் வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணிக்கையுடன் நடைபெற்று வருகிறது.

தொகுதி - வாக்குகள்

மேலூர் சட்டமன்ற தொகுதியில் 291 வாக்கு சாவடிகளில் பதிவான வாக்குகள் - 1,88,974, இவை 14 மேஜைகளில் 21 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

மதுரை கிழக்கு தொகுதிக்கு 400 வாக்கு சாவடிகளில் பதிவான வாக்குகள் - 2,68,300, இவை 14 மேஜைகளில் 29 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

சோழவந்தான் தொகுதிக்கு 261 வாக்கு சாவடிகளில் பதிவான வாக்குகள் 1,87,090, இவை 14 மேஜைகளில் 19 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

உசிலம்பட்டி தொகுதிக்கு 342 வாக்கு சாவடிகளில் பதிவான வாக்குகள் - 2,20,832, இவை 14 மேஜைகளில் 25 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

மதுரை வடக்கு தொகுதிக்கு 266 வாக்கு சாவடிகளில் பதிவான வாக்குகள் - 1,59,738, இவை 14 மேஜைகளில் 25 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

மதுரை தெற்கு தொகுதிக்கு 236 வாக்கு சாவடிகளில் பதிவான வாக்குகள் - 1,40,668, இவை 14 மேஜைகளில் 19 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

மதுரை மத்திய தொகுதிக்கு 253 வாக்கு சாவடிகளில் பதிவான வாக்குகள் - 1,47,498, இவை 14 மேஜைகளில் 26 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

மதுரை மேற்கு தொகுதிக்கு 327 வாக்கு சாவடிகளில் பதிவான வாக்குகள் - 2,14,209, இவை 14 மேஜைகளில் 24 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

மதுரை மத்திய மற்றும் மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அனைத்தும் மதுரைக் கல்லூரி வளாகத்தில் எண்ணப்படவுள்ளன.

திருப்பரங்குன்றம் தொகுதிக்கு 352 வாக்கு சாவடிகளில் பதிவான வாக்குகள் 2,53,228, இவை 14 மேஜைகளில் 26 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

திருமங்கலம் தொகுதிக்கு 351 வாக்கு சாவடிகளில் பதிவான வாக்குகள் - 2,27,216, இவை 14 மேஜைகளில் 26 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

சுற்று பாதுகாப்பு பணி

மின்னணு வாக்கு எண்ணிக்கை இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்க்காக வாக்கு எண்ணிக்கை அலுவலர், நுண் பார்வையாளர், வாக்கு எண்ணிக்கை உதவியாளர் என 5 வாக்கு எண்ணிக்கை மையங்களில் 510 பேர் பணிகளை மேற்க் கொண்டுள்ளனர். தபால் வாக்குகளை எண்ணுவதற்க்காக வாக்கு எண்ணிக்கை அலுவலர், நுண் பார்வையாளர், வாக்கு எண்ணிக்கை உதவியாளர் என 5 வாக்கு எண்ணிக்கை மையங்களில் 308 பேர் பணிகளை மேற்க் கொண்டுள்ளனர். வாக்குகளை எண்ணும் பணிகளை கண்காணிக்கவும், அப்பணிகளுக்கு உதவிட என 5 வாக்கு எண்ணிக்கை மையங்களில் 1,300 பேர் பணிகளை மேற்க் கொண்டுள்ளனர். 10 தொகுதிகளில் பதிவான வாக்குகள் மொத்தமாக 224 சுற்றுக்களாக எண்ணப்பட உள்ளன, குறைந்தபட்சமாக மதுரை தெற்கு தொகுதியில் 17 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட உள்ளது. 10 சட்டமன்ற தொகுதிகளில் 20 ஆயிரத்து 976 தபால் வாக்குகளும் 1475 சர்வீஸ் வாக்குகளும் பதிவாகியுள்ள நிலையில் 64 மேஜைகளாக எண்ணப்படுகிறது. அதிகபட்சமாக மதுரை கிழக்கு தொகுதியில் 29 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட உள்ளது. மதுரை மாவட்டத்தில் அமைக்கப்பட்ட 5 வாக்கு எண்ணிக்கை மையங்களில் மாநகர் மற்றும் மாவட்ட காவல்துறை சார்பில் 2,000 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.

அமைச்சர் பிடிஆர் பின்னடைவு

இந்நிலையில் மதுரை மத்திய தொகுதியில் முதல் சுற்று முடிவடைவில்லை தொகுதியில் தற்போது நிலவரப்படி தமிழக வெற்றி கழகம் முன்னிலையில் உள்ளது. இதனால் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பின்னடைவில் உள்ளார்.

Author : அருண் சின்னதுரை

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu