2026 தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியிருக்கும் நிலையில் திருப்பத்தூர் தொகுதி தவெக வேட்பாளர் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள சம்பவம் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்
பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்றது. இதில் திமுக, அதிமுக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி நிலவியது. இந்த தேர்தலில் 85.10% வாக்குகள் வாக்குகள் பதிவான நிலையில் அனைத்தும் நேற்று எண்ணப்பட்டது. இதில் முதல்முறையாக களம் கண்ட விஜயின் தமிழக வெற்றிக் கழகம் எதிர்பாராத வெற்றியைப் பெற்றுள்ளது. ஆளும் கட்சியாக இருந்த திமுக எதிர்க்கட்சியாக மாறியுள்ளது. கடந்த 2021 தேர்தலில் இரண்டாமிடம் பெற்ற அதிமுக இம்முறை மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறது.
ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை என்பதால் தவெக 108 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் அதிமுக, திமுக கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளின் ஆதரவை கோரவுள்ளதாக சொல்லப்படுகிறது.

