Dailyhunt
TN Result 2026: ஒரு மணி நேரத்தில் மொத்தமாக மாறிய முடிவுகள்-- மாஸ் காட்டும் தவெக விஜய், ஸ்டாலினே ஷாக்

TN Result 2026: ஒரு மணி நேரத்தில் மொத்தமாக மாறிய முடிவுகள்-- மாஸ் காட்டும் தவெக விஜய், ஸ்டாலினே ஷாக்

ABP Nadu 1 week ago

Tamil Nadu Election Results 2026: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை:

தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் கூறி வந்தன. ஆனால், ஒரே ஒரு கருத்து கணிப்பு மட்டுமே தவெக ஆட்சி அமைக்கும் என மதிப்பிட்டது. இந்நிலையில் ஆரம்பத்தில் திமுக முன்னிலை பெற்றாலும் நேரம் செல்ல செல்ல விஜய் தலைமையிலான தவெக படிப்படியாக முன்னேறி 60-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது/. 175 தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரம் வெளியாகியுள்ள நிலையில், 71 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது.

மூன்றாவது இடத்தில் திமுக

காலை சுமார் 9.30 மணி நிலரப்படி, அதிமுக 54 தொகுதிகளிலும், திமுக 50 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது. சென்னையில் போட்டியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி உள்ளிட்ட திமுகவின் முக்கிய நட்சத்திரங்களையே பின்னுக்கு தள்ளி, 16 தொகுதிகளிலும் தவெக முன்னிலை பெற்றுள்ளது. கொங்கு மண்டலத்தில் விஜய்க்கு பெரிய வாக்கு வங்கி இல்லை என கூறப்பட்ட நிலையில், அங்கும் தவெக மிகப்பெரிய அளவில் வாக்குகளை அறுவடை செய்துள்ளது.

Author : குலசேகரன் முனிரத்தினம்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu