Dailyhunt
TN Roundup: வேட்புமனு தாக்கல் நிறைவு.. குறைந்த தங்கம் விலை.. விஜய்க்கு சிக்கல்.. 10 மணி ரவுண்ட் அப் இதோ!

TN Roundup: வேட்புமனு தாக்கல் நிறைவு.. குறைந்த தங்கம் விலை.. விஜய்க்கு சிக்கல்.. 10 மணி ரவுண்ட் அப் இதோ!

ABP Nadu 1 week ago
  • 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. 234 தொகுதிகளிலும் சுமார் 7600 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில் இன்று பரிசீலனை நடைபெறுகிறது.
  • ஏப்ரல் 9ம் தேதி கேரளா, அசாம், புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் இன்று மாலையும் பிரச்சாரம் ஓய்கிறது. இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரை களைகட்டியுள்ளது.
  • தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஓசூர் மற்றும் ஊத்தங்கரை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மாற்றப்பட்டு மாற்று வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,040 குறைந்து ரூ.1,10,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.13,860க்கு விற்பனையாகிறது.
  • நல்ல நேரம் முடிவதற்குள் அனுமதிக்குமாறு போலீசார் மற்றும் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்து மாற்றுப்பாதை வழியாக
    அலுவலகத்துக்குள் சென்றதால் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • அரசியல் மாண்புகளை குழி தோண்டி புதைத்து வருகிறது பாஜக. மக்களாட்சியை காக்க வேண்டிய கடமை புதுச்சேரிக்கு உள்ளது என தேர்தல் பரப்புரை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
  • சாத்தான் குளம் தந்தை மகன் காவல் நிலைய மரண வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் மரண தண்டனை விதித்து மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனை பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.
  • புதுச்சேரி வளர்ச்சியை நோக்கி பயணிக்க என்டிஏ கூட்டணி ஆட்சி அவசியம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
  • திருநெல்வேலி மாவட்டத்தில் நளை தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொள்ள நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். கேடிசி நகர் பகுதியில் பரப்புரை நடைபெறுவதற்கான இடத்தில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
  • திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ் தன்னுடைய சொத்து மதிப்பு ரூ.1,048 கோடி என வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் தமிழ்நாட்டின் பணக்கார வேட்பாளர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
  • 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 44% வாக்குகள் பெற்று ஆட்சியமைக்கும் என Inside Election கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 33% வாக்குகள் பெறும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
  • தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் நிரந்தர தமிழ் ஆசிரியர்கள் இல்லை என அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஒப்பந்த அடிப்படையில் 31 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
  • ராணிப்பேட்டை தொகுதியில் அமைச்சர் காந்தியே மீண்டும் போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக காந்தியின் மகன் வினோத் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் தந்தையின் விருப்பத்தை கருத்தில் கொண்டு தான் போட்டியிடப் போவதில்லை என வினோத் தெரிவித்திருந்தார்.

Author : பேச்சி ஆவுடையப்பன்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu