Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Top 10 News Headlines: ஆளுநரை சந்திக்கும் விஜய், மம்தா பானர்ஜி பிடிவாதம், பிரதமருக்கு ட்ரம்ப் பாராட்டு - 11 மணி செய்திகள்

Top 10 News Headlines: ஆளுநரை சந்திக்கும் விஜய், மம்தா பானர்ஜி பிடிவாதம், பிரதமருக்கு ட்ரம்ப் பாராட்டு - 11 மணி செய்திகள்

ABP Nadu 2 weeks ago
  • தமிழ்நாட்டிற்கான பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லோகரை இன்று சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய்.
  • தவெக தலைவர் விஜய் நாளை பதவியேற்க உள்ளதாக தகவல்.. த.வெ.க. அமைச்சரவை பட்டியலில் யார் இடம்பிடிப்பார்கள் என பெரும் எதிர்பார்ப்பு.
  • ஆட்சியமைக்க ஆதரவு கோரி விசிக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தவெக கடிதம்.
  • தவெக-விற்கு ஆதரவு அளிப்பத குறித்து இன்று அறிவிக்க உள்ளதாக காங்கிரஸ் தகவல்.
  • அதிமுக எதிர்க்கட்சியாக வரமுடியாத நிலையில் இபிஎஸ் மீது எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் அதிருப்தியில் உள்ளதாக தகவல் - முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தலைமையில் சில எம்.எல்.ஏக்கள் தவெக ஆட்சியமைக்க ஆதரவு தெரிவிக்க முடிவு
  • தங்கம் விலை சவரனுக்கு ஆயிரத்து 840 ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை.
  • முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என மம்தா பானர்ஜி பிடிவாதம். தேர்தல் ஆணையத்தின் மூலம் தாங்கள் தோற்கடிக்கப்பட்டதாக விமர்சனம்.
  • மேற்குவங்கத்தில் வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்; வன்முறையில் ஈடுபடுவோரை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என தலைமை செயலாளருக்கு தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் உத்தரவு.
  • மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரின் அரசியல் வாழ்க்கை முடிந்துவிட்டது, அடுத்தது அகிலேஷ் யாதவ் தான் என பாஜக மாநிலத் தலைவர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.
  • மேற்குவங்க தேர்தலில் பாஜக வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்றதற்காக பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வாழ்த்து. மோடியை பிரதமராக பெற்றிருப்பத இந்தியாவின் அதிர்ஷ்டம் என்றும் பாராட்டு.

Author : ஸ்ரீராம் ஆராவமுதன்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu