- டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் விஜய், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, ராகுல் காந்தியை சந்திக்காமலேயே இன்று சென்னை திரும்புகிறார்.
- அதிமுக எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்க விவகாரம்; இன்று தனது முடிவை அறிவிக்கிறார் சபாநாயகர் ஜெசிடி பிரபாகர்.
- அதிமுக-வில் நடந்து வரும் உட்கட்சி மோதல்; இன்று முக்கிய முடிவை அறிவிக்கிறார் சிவி சண்முகம்.
- அதிமுகவில் தொடரலாமா அல்லது MLA பதவியை ராஜினாமா செய்யலாமா என்பது குறித்து முன்னாள் அமைச்சர் சி.விஜயகர் ஆலோசனை விராலிமலையில் உள்ள இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை.
- அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தவெக-வில் இணைந்தார்.
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமிற்கு ரூ.150 குறைந்து, 14,500-க்கும், சவரனுக்கு ரூ.1,200 குறைந்து, ரூ.1,16,000-க்கும் விற்பனை.
- நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை இன்று கோலாகல கொண்டாட்டம். இஸ்லாமியர்கள் மசூதிகளில் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டுள்ளனர்.
- கர்நாடக முதலமைச்சராக டி.கே. சிவக்குமார் பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில், சித்தராமையாவை சந்தித்து, அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார் டி.கே. சிவக்குமார்.
- மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் உள்ள 50 எம்.எல்.ஏ.க்கள், 20 எம்.பி.க்கள் பாஜகவில் இணைய உள்ளதாக மக்களவை எம்.பி. சவுமித்ரா கான் தகவல்.
- ஹார்முஸ் விவகாரத்தில் ஈரானுடன் இணைந்து செயல்பட்டால் ஓமனை தகர்க்க வேண்டிவரும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- அமைதி ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவரும் நிலையில, ஈரான் மீது இரண்டாவது முறையாக அமெரிக்கா தாக்குதல் நடத்தியதால் பதற்றம் அதிகரிப்பு.
Author : ஸ்ரீராம் ஆராவமுதன்

