Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
TVK Party: தவெக என்னை நாயாக கூட மதிக்கவில்லை.. திமுக நிர்வாகி அஜிதா ஆக்னல் ஆதங்கம்!

TVK Party: தவெக என்னை நாயாக கூட மதிக்கவில்லை.. திமுக நிர்வாகி அஜிதா ஆக்னல் ஆதங்கம்!

ABP Nadu 1 month ago

ழைத்தவர்களுக்கு தவெகவில் எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை. என்னை ஒரு நாயாக கூட மதிக்கவில்லை என திமுகவில் இணைந்த அஜிதா ஆக்னல் தெரிவித்துள்ளார்.

பணம் பெற்றுக் கொண்டு தான் தேர்தலில் சீட் கொடுத்தார்கள். மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமென்றால் உங்கள் சொந்த பணத்தை செலவு செய்யுங்கள். மற்றவர்களிடம் பெற்றுக் கொண்டு அதனை கொடுக்க வேண்டாம். பிறப்புக்கு எல்லா உயிர்க்கும் என தவெக சொல்கிறது. தனித் தொகுதியில் மட்டும் தான் தலித் பின்னணி வேட்பாளர்களுக்கு சீட் ஒதுக்கப்பட்டது. ஏன் பொதுத்தொகுதியில் அத்தகைய பின்னணி கொண்டவர்களுக்கு ஒதுக்கப்படவில்லை?.

உழைத்தவர்களுக்கு தவெகவில் எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை. என்னைப் போல ஆயிரம் பேர் உழைத்துக் கொண்டு ஓரமாக அமர்ந்திருக்கிறார்கள். மாவட்ட செயலாளர் பதவி, தேர்தலில் வாய்ப்பு மறுப்பு என்பதால் கட்சியைன் விட்டு போய் விடுவீர்களா என பலரும் என்னிடம் கேட்டார்கள்.

தவெகவில் இரண்டாம் கட்ட தலைவர்கள் எல்லாம் வேறு கட்சியில் இருந்து வந்தவர்கள் தான். அவர்கள் வந்தவுடன் பொறுப்பு வழங்கப்பட்டது. அப்படியாக பொறுப்பு வழங்கப்பட்டால் தான் மக்கள் பணி செய்ய முடியும். வந்தவுடன் முதல்வராக வேண்டும் என எதற்கு நினைக்க வேண்டும். ஒரு அமைப்பை தொடங்கி மக்கள் பணி செய்ய முடியும்.

ஒரு அங்கீகாரம் இருந்தால் தான் மக்கள் பணியாற்ற முடியும். அதைத்தானே நானும் கேட்டேன். நான் எந்த கட்சிக்கும் போகவில்லை. திமுகவுக்கு நான் வேலை பார்க்கவில்லை. பெண்ணாக இருந்ததால் தவெகவில் நிராகரிக்கப்பட்டேன். ஆனால் தாயுள்ளத்துடன் மு.க.ஸ்டாலினும், கனிமொழியும், அனிதா ராதாகிருஷ்ணனும் உன் உழைப்புக்கான அங்கீகாரத்தை நாங்கள் கொடுக்கிறோம் என சொன்னார்கள்.

ஆக, நான் பணம் சம்பாதிக்க திமுகவில் இணையவில்லை. தவெகவில் பொறுப்பு வழங்க சொல்லி 5 ஆயிரம் முறை கேட்டிருப்பேன். பொதுச்செயலாளர் ஆனந்த் காலில் விழுந்து கூட கேட்டேன். நான் உண்மையாக உழைப்பேன் என சொன்னேன். என்னை உதாசீனப்படுத்தினார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் கட்சிக்காக வேலைப் பார்த்த யாருக்காகவும் சீட் கொடுக்கவில்லை. நான் தவெகவை வளர்த்தேன். அக்கட்சி என்னை நாயாக கூட மதிக்கவில்லை. என்னுடன் இருந்தவர்களுக்கு என் பணி என்னவென்று தெரியும்.

யாருமே என்னை மதிக்கவில்லை. நிர்கதியாய் நின்றபோது திமுக என்னை அழைத்தது. அக்கட்சியில் இணைந்து விட்டேன். என்னுடைய மக்கள் பணி பணத்திற்காக கிடையாது” என தெரிவித்துள்ளார். .

Author : பேச்சி ஆவுடையப்பன்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu