கன்னியாகுமரியில் இன்று பரப்புரை மேற்கொண்ட தவெக தலைவர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்தால் மேற்கொள்ளப்பட உள்ள பல அதிரடி திட்டங்களை அறிவித்தார்.
TVK's Agenda for 21st Century Good Governance
- லஞ்சம் இல்லாமல் ஒவ்வொருவருக்கும் அரசின் நலத்திட்டங்கள் போய் சேரும்.
- அதற்கென ஒவ்வொரு குடும்பத்திற்கு தனியாக ஆதார் கார்டு போன்ற தமிழ்நாடு சிட்டிசன்ஷிப் ப்ரிவிலேஜ் கார்டு வழங்கப்படும்.
- ஒவ்வொரு குடும்பத்தை பற்றிய தனித் தரவுகளும் அந்த கார்டில் இருக்கும்.
- பிறப்பில் இருந்தே ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுக்குரிய திட்டப்பலன்கள் போய் சேரும்.
- இதற்காக விண்ணப்பிக்க தேவையில்லை. லஞ்சம் கொடுத்து வேதனை அடைய தேவையில்லை.
- வீட்டு வாசலுக்கே அரசாங்கத்தின் நலத்திட்டங்கள் வந்து சேரும்.
- ஏஐ உதவியுடன் இதற்கான தரவுகள் சாத்தியமாக்கப்படும்.
இந்த அம்சத்தை கூறியபோது, “இது ஏதோ ஸ்டாலின் சார் விடுற கதை மாதிரியில்ல, அறிவியல்பூர்வமா சாத்தியமான ஒன்றை தான் நான் சொல்லிக்கொண்டிருக்கிறேன்“ என விஜய் கூறினார். மேலும், அதை நமது டிவிகே ஆட்சி உருவாக்கிக் காட்டும் என்றும் அவர் உறுதியளித்தார்.
தொடர்ந்து பேசிய விஜய், இதுவரை இந்த அரசு சிஸ்டத்தில், ஏதே ஒரு அரசு அலுவலகத்திற்கு சென்று ஒரு வேலையை செய்து கொடுக்குமாறு கேட்டால், இவர்களை பாருங்க, அவர்களை பாருங்கள், இப்போது வாருங்கள், அப்போது வாருங்கள், இந்த டாக்குமென்ட் சரியில்லை, அந்த டாக்குமென்ட் சரியில்லை, இதை எடுத்துக்கொண்டு வா, அதை எடுத்துக்கொண்டுவா என்று இழுத்தடிப்பார்கள், அப்படிப்பட்ட இழுத்தடிப்புக்கு காரணம் ஆவணங்கள் இல்லை, டப்பு, அதாவது பணம், லஞ்சம் என்று குற்றம்சாட்டினார் விஜய். மேலும், இப்படிப்பட்ட சிஸ்டத்திற்கு Good Governance இல்லை Harassment என்று விஜய் கூறினார்.
“சேவை தாமதமானால் அதிகாரிகள் மீது நடவடிக்கை“
அதோடு, அவர்கள் வாங்கும் லஞ்சம், சம்பந்தப்பட்ட ஆபீசர்களுக்கு மட்டுமே செல்வதில்லை என்றும், சம்பந்தப்பட்ட அமைச்சருக்கும் ஒரு பங்கு செல்வதாக விமர்சித்தார். அதனால், முதலில் இதை முறியடிக்க வேண்டும் என்று கூறினர் விஜய். தொடர்ந்து, அடுத்த அம்சங்களை வாசித்தார். அதன்படி,
- நமது அரசு(டிவிகே) அமைந்த 6 மாதங்களுக்குள், தமிழ்நாடு சேவை உரிமை சட்டம் (Rights to Serive Act) நிறைவேற்றப்படும்.
- வெற்றி தமிழ்நாடு சூப்பர் App என்ற ஒன்று உருவாக்கப்படும். அதில், ஓட்டுநர் உரிமம், ரேஷன் கார்டு, பர்த் சர்ட்டிபிகேட், ஸ்கீம் ட்ராக்கிங்(Scheme Tracking), Compalint Filing வரை அனைத்தும் உங்கள் உள்ளங்கையிலேயே, மொபைலிலேயே இருக்கும்.
- இதில் எந்த சேவை தாமதமானாலும், அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், “மீண்டும் சொல்கிறேன், இடைத்தரகர் என்று எவரும் இல்லை, எவ்வித லஞ்சமும் இல்லை என்று விஜய் கூறினார். மேலும், அடுத்ததாக, TamilNadu Realtime Governance Dashboard for Accountable Governance என்று, தமிழ்நாடு அரசின் பட்ஜெட் வெறும் ஆவணமாக மட்டுமே நமக்குத் தெரியும் என்றும், அதில் ஒவ்வொரு திட்டத்திற்காக ஒதுக்கப்படும் நிதி எங்கே சென்று சேர்கிறது, யாரை சென்று சேர்கிறது என்று நமக்கு தெரியாது என்று கூறியவர், அது ஒரு சிதம்பர ரகசியம் போல, ஸ்டாலின் சார் ரகசியம் போலவே இருக்கிறது என்று விமர்சித்தார். ஆனால், நாம் அதை மாற்றுவோம் என்று கூறினார்.
Author : ஸ்ரீராம் ஆராவமுதன்

