Dailyhunt
TVK Vijay: ஒரு இடத்தில் கூட வெல்லாத திமுக பெண் வேட்பாளர்கள்.. மாஸ் காட்டிய தவெக, அதிமுகவுக்கு 2ம் இடம்!

TVK Vijay: ஒரு இடத்தில் கூட வெல்லாத திமுக பெண் வேட்பாளர்கள்.. மாஸ் காட்டிய தவெக, அதிமுகவுக்கு 2ம் இடம்!

ABP Nadu 1 week ago

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்ட பெண் வேட்பாளர்களில் 13 பேர் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்வாகியுள்ளனர்.

மாஸ் காட்டிய தவெக பெண் வேட்பாளர்கள்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 23 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களை நிறுத்தியது. அதில் திருப்பூர் வடக்கு, குமாரபாளையம், திருவிக நகர், பல்லாவரம், ராணிப்பேட்டை, குடியாத்தம், பாப்பிரெட்டிப்பட்டி, கெங்கவல்லி, ஏற்காடு, தாராபுரம், பவானி சாகர், அவிநாசி, கவுண்டம்பாளையம், ஆத்தூர், வேடசந்தூர், குன்னம், திருமயம், சிவகங்கை, ராஜபாளையம், முதுகுளத்தூர், மதுராந்தகம், வாசுதேவநல்லூர், சிவகாசி ஆகிய தொகுதிகளில் பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

சென்னை திருவிக நகரில்பல்லவி, பல்லாவரத்தில் காமாட்சி, அவிநாசியில் கமலி, ராணிப்பேட்டையில் தாஹிரா, சிவகாசியில் கீர்த்தனா, குடியாத்தம் தொகுதியில் சிந்து, குமாரபாளையம் விஜயலட்சுமி, பவானிசாகர் தமிழ் செல்வி, திருப்பூர் வடக்கு சத்தியபாமா, கவுண்டம்பாளையம் கனிமொழி சந்தோஷ், கிருஷ்ணராயபுரம் சத்யா, சிவகங்கை குழந்தை ராணி, ராஜபாளையம் ஜெகதீஸ்வரி ஆகியோர் வெற்றி பெற்றிருக்கின்றனர். இது தமிழக வெற்றிக் கழக தலைமையை உற்சாகப்படுத்தியுள்ளது.

பிற பெண் வேட்பாளர்கள் நிலை என்ன?

தமிழக சட்டமன்றத்தில் 234 இடங்கள் உள்ள நிலையில் இம்முறை மொத்தமே 23 பெண்கள் தான் வெற்றி பெற்றுள்ளனர். அதில் தருமபுரியில் போட்டியிட்ட பாமகவின் சௌமியா அன்புமணி, விருதாசலத்தில் போட்டியிட்ட தேமுதிகவின் பிரேமலதா விஜயகாந்த், குளச்சல் தொகுதியில் காங்கிரஸின் தாரகை கத்பட், மதுராந்தகரத்தில் அதிமுகவின் மரகதம் குமரவேல், கீழ் வேளுர் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் லதா, லால்குடியில் அதிமுகவின் லீமா ரோஸ், தாராபுரத்தில் அதிமுகவின் சத்யபாமா, பாப்பிரெட்டிப்பட்டி அதிமுகவின் மரகதம் வெற்றிவேல், ஆரணி அதிமுகவின் ஜெயசுதா, ஏற்காட்டில் அதிமுகவின் உஷாராணி ஆகியோர் ஜெயித்துள்ளனர். திமுக சார்பில் போட்டியிட்ட ஒரு பெண் வேட்பாளர்கள் கூட ஜெயிக்காதது அக்கட்சியினர் இடையே பெரும் சோகமான விஷயமாக அமைந்துள்ளது.

Author : பேச்சி ஆவுடையப்பன்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu