Dailyhunt
TVK Vijay : விஜய் வீட்டில் கொண்டாட்ட கூச்சல்...அப்பா எஸ்.ஏ.சி ஹேப்பி

TVK Vijay : விஜய் வீட்டில் கொண்டாட்ட கூச்சல்...அப்பா எஸ்.ஏ.சி ஹேப்பி

ABP Nadu 1 week ago

மிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று அதிகாலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. 11 மணி நிலவரப்படி தவெக மொத்தம் 101 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது.

ஆளும் கட்சியான திமுக 39 தொகுதிகளிலும் அதிமுக 69 தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்து வருகிறது. இப்படியான நிலையில் தவெக ஆதரவாளர்கள் ஏற்கனவே கொண்டாட்டத்தை தொங்கியுள்ளார்கள். விஜயின் அப்பா எஸ்.எ சந்திரசேகர் மற்றும் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியாக கொண்டாடி வரும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ்நாடுசட்டமன்ற தேர்தல் முடிவுகள்வெளியாகி, அரசியல்வாதிகளை தாண்டி பொதுமக்களையும் கூட பெரிய அளவில் ஆச்சரியப்படுத்தியுள்ளது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 100-க்கும் அதிகமான தொகுதிகளில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்றுள்ளது. மாநில சட்டப்பேரவையில் தனிப்பெரும் கட்சியாகவும் உருவெடுக்கும் சூழல் நிலவுகிறது. கூட்டணி ஆட்சி அமைத்து விஜய் முதலமைச்சராக அதிகப்படியான வாய்ப்புகள் நிலவுகிறது. தமிழகமெங்கும் தவெகவுக்கு வாக்களித்த மக்கள் ஏற்கனவே வெற்றிக் கொண்டாட்டத்தை துவங்கியுள்ளார்கள்.

தற்போதைய நிலவரப்படி தவெக 113 தொகுதிகளில் முன்னிலை வகுத்து வருகிறது. அதிமுக 70 தொகுதிகளிலும் ஆளும் கட்சியான திமுக 52 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது. 118 தொகுதிகளில் வெற்றிபெறும் பட்சத்தில் தவெக தனிப்பெரும்பான்மையில் ஆட்சி அமைக்கும். தவெக எந்த கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கும் என கேள்வியாக இருந்து வருகிறது .

Author : ராகேஷ் தாரா</

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu