வர்த்தகரீதியான சிலிண்டர் விலை உயர்வு என்பது தற்காலிக மாற்றம் மட்டுமே. பெட்ரோல், டீசல் விலை உயராமல் இருப்பது பிரதமர் மோடியின் நிர்வாகத்திறமை காரணம் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தராஜன் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த மேலூர் பகுதியில் உள்ள திருவுடையம்மன் கோயிலில் சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சாமி தரிசனம் செய்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் பௌர்ணமி நாளில் திருவுடையம்மன், வடிவுடையம்மன், கொடியுடையம்மன் ஆகிய மூன்று தேவியை வணங்கிட வேண்டும் என வந்துள்ளதாக கூறினார். தமிழ்நாட்டிற்கு நல்லது நடக்க வேண்டும், தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டும், தமிழ்நாடு முழுவதும் வெற்றி பெற்று மாற்றம் வர வேண்டும் எனவும் பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கூறினார்.

