Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
US Iran Hormuz: துக்கத்திற்கு நடுவிலும் தாக்குதல்.! ஹார்முஸில் தாக்கப்பட்ட 2 கப்பல்கள்; ஈரானை கைகாட்டும் அமெரிக்கா

US Iran Hormuz: துக்கத்திற்கு நடுவிலும் தாக்குதல்.! ஹார்முஸில் தாக்கப்பட்ட 2 கப்பல்கள்; ஈரானை கைகாட்டும் அமெரிக்கா

ABP Nadu 1 month ago

ரான் தனது உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவுக்கு துக்கம் அனுசரித்து வருகிறது. நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படும் நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில் பதற்றம் அதிகரித்து வருவது போல் தெரிகிறது.

ஹார்முஸ் ஜலசந்தியில் இரண்டு கப்பல்கள் தாக்கப்பட்டதில், அந்த இரண்டு கப்பல்களுக்கும் கணிசமான சேதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்து, ஈரானை குற்றம் சாட்டியுள்ளது.

பத்திரிகையாளர் பராக் ரவித்தின் அறிக்கையின்படி, இரண்டு கப்பல்களும் ஏவுகணைகளால் தாக்கப்பட்டு பலத்த சேதமடைந்தன. முக்கியமாக, கப்பல்களில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து சென்றுகொண்டிருந்தபோது, ​​ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையினர் இரண்டு கப்பல்களையும் தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து ஈரான் இதுவரை அதிகாரப்பூர்வ அறிக்கை எதையும் வெளியிடவில்லை.

ஈரான் - அமெரிக்கா இடையே பதற்றம் தொடர்ந்து அதிகமாகவே உள்ளது

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே பல நாட்கள் நீடித்த சண்டைக்குப் பிறகு, ஒரு போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, இரு நாடுகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இருப்பினும், பதற்றம் என்னவோ நீடிக்கவே செய்கிறது.

அமெரிக்க தாக்குதலில் ஈரான் தனது உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியை இழந்தது. கமேனியுடன், மேலும் பல ஈரானிய அதிகாரிகளும் கொல்லப்பட்டனர். இந்நிலையில், தனது ராணுவம் ஈரானுக்கு ஒரு கடுமையான அடியை கொடுத்துள்ளது என்றும், இப்போது துக்கம் அனுசரிக்க வேண்டிய நேரம் இது என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சமீபத்தில் கூறினார்.

இதனிடையே, சில நாட்களுக்கு முன் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. அதனால் கோபமடைந்த அமெரிக்கா, ஈரான் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அதைத் தொடர்ந்து, பதிலடியாக, ஈரானும், கத்தார் உள்ளிட்ட நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.

அதனால் ஏற்பட்ட பதற்றம் தனிவதற்குள், தற்போது புதிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது, புதிய பதற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அமெரிக்கா-ஈரான் இடையே மீண்டும் பிரச்னை வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனினும், கமேனியின் இறுதிச் சடங்கு முடியும் ஜூலை 9-ம் தேதி வரை, எந்த தாக்குதலும் நடத்தப்பட மாட்டாது என அமெரிக்கா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கமெனேயின் உடல் எப்போது அடக்கம் செய்யப்படும்.?

கமேனியின் இறுதிச் சடங்கு சுமார் 5 முதல் 6 நாட்கள் நடைபெறும். அவரது உடல் ஈரானிய நகரமான கோமில் உள்ள ஜம்கரன் மசூதிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர் கமெனியின் உடல் ஈராக்கிற்கு கொண்டு செல்லப்படும். ஜூலை 9-ம் தேதி, கமேனியின் சொந்த ஊரான மஷ்ஹத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும்.

Author : ஸ்ரீராம் ஆராவமுதன்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu