Dailyhunt
Vijay Swearing-In: ''ஜோசப் விஜய் ஆகிய நான்'' முதலமைச்சர் பதவியேற்பு எப்போ? எங்கே? தேதி குறித்த தவெக!

Vijay Swearing-In: ''ஜோசப் விஜய் ஆகிய நான்'' முதலமைச்சர் பதவியேற்பு எப்போ? எங்கே? தேதி குறித்த தவெக!

ABP Nadu 4 days ago

வெக தலைவர் விஜய் நாளை மறுநாள் (மே 7ஆம் தேதி) முதலமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பதவியேற்பு விழா நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. எனினும் 234 தொகுதிகளில் 118 தொகுதிகள் தேவை என்பதால், சில கட்சிகளின் ஆதரவைக் கோரி, தவெக ஆட்சியமைக்கும் என்று தெரிகிறது.

11 உறுப்பினர்கள் ஆதரவு தேவை

குறிப்பாக, தவெக தலைவர் விஜய், 2 தொகுதிகளில் நின்று வெற்றி பெற்றதால் 107 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். இதனால் 11 உறுப்பினர்களின் ஆதரவை தவெக கோர வேண்டும். இதில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் 5 இடங்களிலும் விசிக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 2 இடங்களிலும் என 11 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

இவர்களின் ஆதரவை விஜய் கோருவாரா? அல்லது காங்கிரஸ் மற்றும் அதிமுக கூட்டணியில் உள்ள பாமக, அமமுக ஆதரவை விஜய் கேட்பாரா என்று மில்லியன் டாலர் கேள்வி எழுந்துள்ளது.

சட்டப்பேரவைக் குழுத் தலைவரான விஜய்

இந்த நிலையில், பனையூரில் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்றுகூடி விஜயை இன்று சட்டப்பேரவைக் குழுத் தலைவராகத் தேர்வு செய்தனர். அதைத் தொடர்ந்து ஆளுநர் அர்லேகரிடம் ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு தவெக தலைவர் விஜய் அழைப்பு கடிதம் அளித்தார்.

இதைத் தொடர்ந்து நாளை மறுநாள் (மே 7) தவெக தலைவர் ஜோசப் விஜய் தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளதாகக் குறிப்பிடத்தக்கது.

Author : க.சே.ரமணி பிரபா தேவி

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu