Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
விஜய் தான் அடுத்த PM.! அப்போ ராகுல் காந்தி.? ஜோதிடம் கணித்த கனிமொழி MLA- என்ன சொல்லியிருக்கார் தெரியுமா.?

விஜய் தான் அடுத்த PM.! அப்போ ராகுல் காந்தி.? ஜோதிடம் கணித்த கனிமொழி MLA- என்ன சொல்லியிருக்கார் தெரியுமா.?

ABP Nadu 4 days ago

தமிழக முதலமைச்சராக விஜய்

மிழகத்தில் கடந்த 50 ஆண்டு காலத்திற்கும் மேலாக திமுக- அதிமுக என்ற இரு திராவிட கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆட்சி அமைத்து வந்த நிலையில், 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தார்.

இதனையடுத்து திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவோடு முதலமைச்சராக பதவியேற்றுள்ளார் விஜய். இந்த நிலையில் அடுத்த இலக்காக இந்திய பிரதமர் விஜய் என்ற பிரச்சாரம் நாடு முழுவதும் பரவி வருகிறது.

அடுத்த பிரதமர் யார்.?

பல மாநிலங்களில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் சாதனை என்ற பெயரில் ரீல்ஸ் கொடி கட்டி பறந்து வருகிறது. குறிப்பாக வட மாநிலங்களில் வீடியோக்களை வெளியிட்டும், அடுத்த பிரதமர் யார் என பொதுமக்களிடம் விஜய்யை முன்னிறுத்தி கேள்விகளை கேட்டு வருகிறார்கள். அந்த வகையில் கடந்த 100 நாட்களில் தமிழகத்தில் பல திட்டங்களை விஜய் அறிவித்து சாதித்துள்ளதாகவும் ரீல்ஸ் பரவி வருகிறது. இதற்கு ஏற்ப தவெக அமைச்சர்களும் அடுத்த பிரதமர் விஜய் என அடித்து கூறி வருகிறார்கள்.

ஜோதிடம் கணித்த தவெக எம்எல்ஏ கனிமொழி

இந்த நிலையில் தவெகவின் கவுண்டம்பாளையம் எம்எல்ஏ கனிமொழி ஜோதிடம் கணித்து வருகிறார். அந்த வகையில் அடுத்த பிரதமர் யார் என்ற தனது கணிப்பை கனிமொழி வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2029ஆம் ஆண்டு பிரதமர் வேட்பாளர் தளபதி தான், கடந்த 2 நாட்களாக தீவிரமாக அந்த பேச்சு வந்து கொண்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு இதே போல நிகழ்வு தான் ஏற்பட்டது அப்போதும் என்னிடம் இதைத்தான் கேட்டார்கள். எனவே 2026ஆம் ஆண்டில் என்ன நடைபெற்றது என நாடே பார்த்துள்ளது. 2029 ஆம் ஆண்டில் பிரதமர் யார் என முடிவு செய்யப்போவது டெல்லி இல்லை, தமிழ்நாட்டில் இருந்து தான் முடிவு செய்வார்கள். 2029ஆம் ஆண்டு இந்திய நாட்டில் மிகப்பெரிய மாற்றம் பார்க்கும் என தெரிவித்தார்.

ராகுல் காந்தி என்ன செய்யப்போகிறார்.?

தவெக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி உள்ளது. அடுத்த பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி என கூறி வருகிறார்களே என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், என்ன நடக்கப்போகிறது என 2029ஆம் ஆண்டில் இந்த விஷயத்தை பார்ப்பீர்கள், அவர்கள்(காங்கிரஸ்) உள்ளே இருப்பார்களா.? வெளியே செல்வார்களா.? தெரியும். 2026ஆம் ஆண்டு முதலமைச்சராக விஜய்யை அந்த சீட்டில் உட்கார வைத்ததே ராகுல் காந்தி தான்,

எனவே அவரே விஜய் கையை பிடித்து பிரதமர் நாற்காழியில் அமரவைப்பார். எனவே நான் 2025 ஆம் ஆண்டில் கணித்தது 2026 நடைபெற்றது. எனவே 2029ஆம ஆண்டில் இது தான் நடக்கும் நான் ஆணித்தரமாக கூறுகிறேன் என தவெக எம்எல்ஏ கனிமொழி தெரிவித்தார்.

Author : கு. அஜ்மல்கான்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu