Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
விருதுநகர் பட்டாசு விபத்து: உயர்நீதிமன்றம் அதிரடி; தடுப்பு குழு அமைக்க உத்தரவு !

விருதுநகர் பட்டாசு விபத்து: உயர்நீதிமன்றம் அதிரடி; தடுப்பு குழு அமைக்க உத்தரவு !

ABP Nadu 1 week ago

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு விபத்துக்களை தடுக்க கோரிய வழக்கு, இலவச சட்ட உதவி மைய தலைவர் தலைமையில் தொடர்புடைய அனைத்து துறை உயர் அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து, விபத்துகளை தவிர்ப்பது குறித்து விவாதித்து அதன் அறிக்கையை நீதிமன்றத்தில்.

தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

சிவகாசியை சேர்ந்த சமுத்திரவள்ளி, வேலுதாய் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில், "சிவகாசி எட்டக்காபட்டி பட்டாசு ஆலையில் நடந்த விபத்தில் கணவர்கள் உயிரிழந்த நிலையில் இழப்பீடு கோரி வழக்கினைத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி பட்டாசு ஆலைகளில் உரிமம், பாதுகாப்பு அலுவலர் நியமனம், தொடர் ஆய்வு, பாதுகாப்பு பயிற்சி உட்பட வெடி பொருள் சட்டம், தொழிற்சாலை சட்டம் உள்ளிட்ட சட்ட விதிகள் தொடர்பாக பல்வேறு உத்தரவுகளை வழங்கியிருந்தார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் அரசுத் தரப்பில் மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் கார்த்திகேயன் சக்திவேல் அவர்களின் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்

விருதுநகர் மாவட்டத்தில் அடிக்கடி நிகழும் பட்டாசு விபத்துக்களை தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என மாவட்ட இலவச சட்ட உதவி மைய தலைவர் தலைமையில் தொடர்புடைய அனைத்து துறை உயர் அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து,விவாதித்து அதன் அறிக்கையை நீதிமன்றத்தில். தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்,

Author : அருண் சின்னதுரை

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu