Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
7-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - வாலிபர் சென்னையில் கைது!

7-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - வாலிபர் சென்னையில் கைது!

APC News Tamil 1 day ago

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை பகுதியில் 7-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் வாலிபரை போலீசார் சென்னையில் கைது செய்தனர்.

அருமனை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரைப் பிரிந்து, 7-ஆம் வகுப்பு படிக்கும் மகளுடன் வசித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பெண் கோவையில் உள்ள ஜவுளிக்கடையில் பணியாற்றியபோது, அங்கு உடன் பணியாற்றிய அஜித்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் இருவரும் வேலையை விட்டுவிட்டு அருமனை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அந்தப் பெண்ணின் மகளிடம் அஜித்குமார் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு, பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில், மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அஜித்குமார் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இதையடுத்து தலைமறைவான அவரைத் தேடி வந்த போலீசார், சென்னையில் கைது செய்தனர். பின்னர் அவரை மார்த்தாண்டத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாப்பிரெட்டிப்பட்டி அருகே பெண்ணின் அந்தரங்கப் புகைப்படங்கள், வீடியோக்களை உறவினர்களுக்கு அனுப்பியதாகப் புகார் - நடவடிக்கை கோரி எஸ்.பி. அலுவலகத்தில் மனு!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: APC News Tamil