Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
AN-32 விமான விபத்தில் 5 விமானப்படை வீரர்கள் பலி!

AN-32 விமான விபத்தில் 5 விமானப்படை வீரர்கள் பலி!

APC News Tamil 3 days ago

சாமில் விமானப் படை விமானம் விபத்துக்குள்ளானதில் 5 வீரா்கள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலம் ஜோர்ஹாட் விமானப்படை தளத்தில் AN-32 ரக போக்குவரத்து விமானம் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானதில் 5 விமானப்படை வீரர்கள் உயிரிழந்தனர். ஓடுதளத்தில் தரையிறங்கியபோது விமானத்தில் திடீரென தீப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 5 வீரர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த துணை விமானி ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். விபத்துக்கான காரணம் குறித்து விமானப்படை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அசாமில் நிகழ்ந்த இந்த துயரச் சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: APC News Tamil