Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
டாஸ்மாக் ஊழியர்கள் மேலும் 150 பேர் சஸ்பெண்ட்: ரூ.10 கூடுதல் வசூல் விவகாரத்தில் அதிரடி நடவடிக்கை!

டாஸ்மாக் ஊழியர்கள் மேலும் 150 பேர் சஸ்பெண்ட்: ரூ.10 கூடுதல் வசூல் விவகாரத்தில் அதிரடி நடவடிக்கை!

APC News Tamil 1 week ago

திய உயர்வு அளித்த பிறகும் தொடரும் முறைகேடு - இதுவரை 217 பேர் மீது நடவடிக்கை பாய்ந்ததுமது பாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக ரூ.10 வசூலித்த புகாரில், தமிழகம் முழுவதும் மேலும் 150 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று 67 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 217 ஆக உயர்ந்துள்ளது மதுப்பிரியர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிரடி ஆய்வும் சஸ்பெண்ட் நடவடிக்கையும்
தமிழக அரசு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் கீழ் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளில், பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 முதல் ரூ.20 வரை வசூலிக்கப்படுவதாக நீண்டகாலமாக பொதுமக்கள் தரப்பில் புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன.

இதனைத் தொடர்ந்து, டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் தீவிர சர்ப்ரைஸ் சோதனைகளை மேற்கொண்டனர். இதில், வாடிக்கையாளர்களிடம் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக ரூ.10 வசூலித்தது உறுதியானது.

இதன் முதற்கட்டமாக, நேற்று முதன்மை விற்பனையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் உட்பட 67 ஊழியர்கள் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டனர். இந்த அதிரடி சோதனைகள் தொடர்ந்த நிலையில், இன்று மேலும் 150 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஊதிய உயர்வு அளித்தும் ஓயாத முறைகேடு
டாஸ்மாக் ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, சமீபத்தில் தான் தமிழக அரசு அவர்களுக்கு கணிசமான ஊதிய உயர்வை வழங்கி உத்தரவிட்டது. பணிப் பாதுகாப்பும், ஊதிய உயர்வும் அளிக்கப்பட்ட பின்னரும் கூட, பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கும் பழக்கத்தை ஊழியர்கள் கைவிடவில்லை என்பது நிர்வாகத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து டாஸ்மாக் உயர் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்:
“அரசு ஊழியர்களுக்குத் தேவையான ஊதிய உயர்வை வழங்கிய பின்னரும், வாடிக்கையாளர்களிடம் கூடுதல் பணம் வசூலிப்பது கடுமையான சேவை விதிமீறலாகும். நுகர்வோரை சுரண்டும் இத்தகைய நடவடிக்கைகளை சகித்துக் கொள்ள முடியாது. சோதனை தொடர்ந்து நடைபெறும்; தவறு செய்யும் ஊழியர்கள் மீது தயவுதாட்சண்யமின்றி பணிநீக்கம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் தொடரும்” எனக் எச்சரித்துள்ளார்.

மதுப்பிரியர்கள் வரவேற்பு
டாஸ்மாக் நிர்வாகத்தின் இந்த அதிரடி நடவடிக்கையை மதுப்பிரியர்களும், சமூக ஆர்வலர்களும் வரவேற்றுள்ளனர். அதே வேளையில், அனைத்து கடைகளிலும் ‘கூடுதல் பணம் தர வேண்டாம்’ என்ற அறிவிப்புப் பலகையை வெளிப்படையாக வைக்க வேண்டும் என்றும், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை (UPI Payment) அனைத்து கடைகளிலும் முழுமையாகக் கட்டாயமாக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர் சஸ்பெண்ட் நடவடிக்கைகளால் டாஸ்மாக் வட்டாரத்தில் பெரும் கலக்கம் நிலவி வருகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: APC News Tamil