நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, டெலிகிராம் செயலியின் பயன்பாட்டுக்கு நாடு முழுவதும் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வின் போது, வினாத்தாள் டெலிகிராம் மூலம் பகிரப்பட்டதாக விசாரணையில் தெரியவந்ததைத் தொடர்ந்து, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, ஜூன் 22-ஆம் தேதி வரை ஒரு வார காலத்திற்கு டெலிகிராம் செயலியைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஏற்கனவே அனுப்பப்பட்ட தகவல்களை நீக்கும் (Delete) வசதியையும் தற்காலிகமாக நிறுத்துமாறு டெலிகிராம் நிறுவனத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

