Dailyhunt
எஸ்.ஐ.ஆர் குறித்து அனைவருக்கும் புரிய வையுங்கள் - கமலஹாசன் பேட்டி

எஸ்.ஐ.ஆர் குறித்து அனைவருக்கும் புரிய வையுங்கள் - கமலஹாசன் பேட்டி

APC News Tamil 5 months ago

பீகார் மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றியை பார்க்க வேண்டியவர்கள் வெற்றி பெற்றவர்கள் நாம் அது நேர்மையாக வந்ததாக என்று தான் பார்க்க வேண்டும் சென்னை விமான நிலையத்தில் மக்கள் நீதி மைய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் பேட்டியளித்துள்ளாா்.

மக்கள் நீதி மைய்யம் கட்சித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான கமலஹாசன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து, "பீகார் மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றியை பார்க்க வேண்டியவர்கள் வெற்றி பெற்றவர்கள். நாம் அது நேர்மையாக வந்ததாக என்று தான் பார்க்க வேண்டும். அது மாபெரும் வெற்றி தான் வெற்றியாளர்களின் சந்தோஷம் அது. அதில் நமக்கு சந்தோஷம் இருக்கிறதா என்று தான் நாம் ஆராய வேண்டும். எஸ்.ஐ.ஆர் குறித்து அனைவருக்கும் புரிய வைக்க வேண்டும் என்னால் முடிந்தவரை நான் செய்கிறேன். நீங்களும் சேர்ந்து அதற்கு உதவி செய்ய வேண்டும் என்பதுதான் எனது தாழ்மையான வேண்டுகோள்.

எனது தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் இருந்து இயக்குனர் சுந்தர் சி விளங்கியது குறித்து அவர் கருத்து தெரிவித்துவிட்டார். எனது கருத்து என்னுடைய நட்சத்திரத்திற்கு பிடித்த கதையை எடுப்பதுதான் எனக்கு ஆரோக்கியமானது. அதை தான் தற்போது செய்துள்ளோம். ரஜினிகாந்த்துக்கு பிடிக்கும் வரை கதை கேட்டுக் கொண்டே இருப்போம். புதிய இயக்குனர்களுக்கும் இதில் வாய்ப்பு இருக்கிறது. கதை நல்லா இருக்க வேண்டும் அவ்வளவுதான். நானும் ரஜினி காந்தும் இணைந்து நடிப்பதற்கு இன்னொரு கதையை தேடிக் கொண்டிருக்கிறோம். தற்போது என் தயாரிப்பில் அவர் மட்டும் நடிக்கிறார். எதிர்பாராததை எதிர்பாருங்கள்" என்று மக்கள் நீதி மைய்யம் கட்சித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான கமலஹாசன் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்துள்ளாா்.

எதிர்பாராததை எதிர்பாருங்கள்…. ‘தலைவர் 173’ குறித்து கமல்ஹாசன் பேட்டி!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: APC News Tamil