Dailyhunt
இக்கட்டான சூழலிலும் உங்களுடன் இருப்பேன் - திமுக தலைவரை சந்தித்து ரஜினிகாந்த் உறுதி

இக்கட்டான சூழலிலும் உங்களுடன் இருப்பேன் - திமுக தலைவரை சந்தித்து ரஜினிகாந்த் உறுதி

APC News Tamil 5 days ago

க்கட்டான சூழ்நிலையிலும் உங்களுடன் இருப்பேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து ரஜினிகாந்த் உறுதியளித்துள்ளார்.

திமுக தலைவரான மு.க.ஸ்டாலினை, நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பின்போது, “எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் நான் உங்களுடன் இருப்பேன்” என்று ரஜினிகாந்த் உறுதியளித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக அரசியல் களத்தில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வரும் சூழலில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் இடையேயான இந்தச் சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இருவருக்கும் இடையே நீண்டகாலமாக சுமூகமான நட்பு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், திமுக தலைவா் மு.க.ஸ்டாலினை “இந்திய அரசியலின் நட்சத்திரம்” என்று ரஜினிகாந்த் புகழ்ந்து பேசியிருந்தார். இது அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது. தற்போது, இக்கட்டான சூழலில் ஆதரவு தெரிவிக்கும் வகையில் ரஜினிகாந்தின் இந்த உறுதிமொழி அமைந்திருப்பது, திமுக வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பு குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் விரிவாக வெளியாகவில்லை என்றாலும், வரவிருக்கும் காலக்கட்டத்தில் இது தமிழக அரசியலில் புதிய மாற்றங்களுக்கு வழிவகுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தவெக எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 113 ஆக உயர்வு

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: APC News Tamil