Dailyhunt
இஸ்ரேலின் புதிய மரண தண்டனைச் சட்டம் - 8 முஸ்லீம் நாடுகள் கண்டனம்

இஸ்ரேலின் புதிய மரண தண்டனைச் சட்டம் - 8 முஸ்லீம் நாடுகள் கண்டனம்

APC News Tamil 2 weeks ago

ஸ்ரேல் அரசு கொண்டு வந்துள்ள புதிய மரண தண்டனைச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், எட்டு முக்கிய முஸ்லீம் நாடுகள் ஒன்றிணைந்து தங்களது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளன.

பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் இந்தச் சட்டத்தை இஸ்ரேல் அரசு கொண்டு வந்துள்ளது. இந்தச் சட்டத்தின் கீழ், குற்றம் சாட்டப்பட்ட 90 நாட்களுக்குள் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் மற்றும் மேல்முறையீடு அல்லது மன்னிப்பு கோரும் அதிகாரம் கடுமையாகக் குறைக்கப்படும்.

மேலும், இச் சட்டம் மனித உரிமைகளுக்கு எதிரானது என்றும், இது பிராந்தியத்தில் பதற்றத்தை உருவாக்கும் என்றும் பல்வேறு நாடுகள் கருத்துகள் தெரிவித்துள்ளன. துருக்கி, ஈரான், சவுதி அரேபியா உள்ளிட்ட முக்கிய முஸ்லீம் நாடுகள் இந்த விவகாரத்தில் தங்களது கவலையை வெளிப்படுத்தியுள்ளன.

​இந்தச் சட்டம் குறிப்பாகப் பாலஸ்தீனியர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படலாம் என்ற அச்சம் சர்வதேச அளவில் எழுந்துள்ளது. சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் இஸ்ரேலின் இந்த முடிவுக்குத் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

போரிலிருந்து விலகத் திட்டமிடுகிறாரா டிரம்ப்? – ஒரு விரிவான பார்வை

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: APC News Tamil