Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு இன்று  முதல் விண்ணப்பம் தொடக்கம்..

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பம் தொடக்கம்..

APC News Tamil 2 hrs ago

மிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் (TANUVAS) இளநிலை பட்டப்படிப்புகளுக்கான (B.V.Sc. & A.H. மற்றும் B.Tech.) மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு இன்று (மே 25) காலை 10 மணி முதல் தொடங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்குகிறது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, 2026-27 கல்வியாண்டிற்கான பி.வி.எஸ்சி - ஏ.ஹெச் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று காலை 10 மணி முதல் ஆரம்பமாகிறது.

சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை மற்றும் தேனி வீரபாண்டி உள்ளிட்ட 7 இடங்களில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்பான பி.வி.எஸ்சி - ஏ.ஹெச் படிப்புக்கு மொத்தம் 660 இடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் [தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக சேர்க்கை தளம்] https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தின் மூலம் ஜூன் 17-ம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மேலும், பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ், பி.வி.எஸ்சி - ஏ.ஹெச் மற்றும் பி.டெக் படிப்புகளில் 100-க்கும் மேற்பட்ட இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: APC News Tamil