Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
காங்கிரஸ் தலைவர்களை ஏன் சந்திக்கவில்லை? - டெல்லி பயணத்தில் முதல்வர் விஜய் எடுத்த திடீர் முடிவின் பின்னணி

காங்கிரஸ் தலைவர்களை ஏன் சந்திக்கவில்லை? - டெல்லி பயணத்தில் முதல்வர் விஜய் எடுத்த திடீர் முடிவின் பின்னணி

APC News Tamil 2 weeks ago

டெல்லி பயணத்தின் போது காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சந்திப்பு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள காங்கிரஸ் எம்.பி. கிறிஸ்டோபர் திலக், "தற்போதைய அரசியல் சூழலில் ஆற அமர்ந்து முக்கிய ஆலோசனைகள் நடத்த முடியாத நிலை இருந்ததால் இந்த சந்திப்பு நடைபெறவில்லை" என தெரிவித்துள்ளார். மேலும், முதலமைச்சர் விஜய் மீண்டும் ஜூன் 11ஆம் தேதி டெல்லி செல்லவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். டெல்லியில் தற்போது கர்நாடக முதலமைச்சர் மாற்றம் தொடர்பான ஆலோசனைகள், ஜார்கண்ட் மாநில ராஜ்யசபா உறுப்பினர் விவகாரம் உள்ளிட்ட பல முக்கிய அரசியல் விவகாரங்களில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனாலேயே திட்டமிடப்பட்ட சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை முதலமைச்சர் விஜய் சந்தித்து ஆலோசனை நடத்தியிருந்தார். தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள் மற்றும் புதிய திட்டங்கள் தொடர்பாக இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, டெல்லியில் பணிபுரியும் தமிழகத்தை சேர்ந்த மூத்த ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுடனும் முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தினார். மேலும், மத்திய அமைச்சரவை செயலாளர் டி.வி. சோமநாதனையும் சந்தித்து முக்கிய நிர்வாக ஆலோசனைகள் மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், இன்று காலை சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இதற்காக டெல்லியின் பல பகுதிகளில் விஜய் மற்றும் ராகுல் காந்தி கை கோர்த்திருக்கும் வகையிலான பிரமாண்ட பேனர்களையும் காங்கிரஸ் கட்சியினர் அமைத்திருந்தனர். நீண்ட காலமாக ராகுல் காந்தியுடன் நல்ல உறவு கொண்டிருந்த விஜய், தற்போது கூட்டணியில் இணைந்த பிறகு மேலும் நெருக்கமாகியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது.

இதனால் இந்த சந்திப்பு அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் சந்திப்பு ரத்து செய்யப்பட்டதால் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். சந்திப்பு ஏன் ரத்து செய்யப்பட்டது என்பது குறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகாத நிலையில், அரசியல் காரணங்களே இதற்குப் பின்னணியாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, திட்டமிட்டபடி காங்கிரஸ் தலைவர்களை சந்திக்காமல் முதலமைச்சர் விஜய் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை திரும்பியுள்ளார்.

கணினி தரவு வழங்கிகள் மேம்பாடு: உயர் அழுத்த மின் நுகர்வோருக்கான இணையதள சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: APC News Tamil