Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
நாகையில் பட்டப்பகலில் கள்ளச்சாரய விற்பனை.. 5 பேர் கைது

நாகையில் பட்டப்பகலில் கள்ளச்சாரய விற்பனை.. 5 பேர் கைது

APC News Tamil 2 days ago

நாகை – அகலங்கண் மற்றும் வண்டலூர் ஊராட்சிகளில் பட்டப்பகலிலேயே கள்ளசாராயம் விற்பனை செய்யும் காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டத்தில் பட்டப்பகலிலேயே கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற்ற சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அகலங்கண் மற்றும் வண்டலூர் ஊராட்சிப் பகுதிகளில் வெளிப்படையாக கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. குறிப்பாக பெண்கள் மற்றும் மாணவர்கள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.

இந்த நிலையில், பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதன்படி கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக ராஜேந்திரன், சுந்தரமூர்த்தி, தனபாக்கியம், மணிகண்டன் மற்றும் மணிரத்தினம் ஆகிய 5 பேரை கைது செய்துள்ளனர். மேலும், சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாகையில் பட்டப்பகலிலேயே கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுபோன்ற சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: APC News Tamil