Dailyhunt
ஒவ்வொரு வேட்பாளரையும் மிகவும் சிந்தித்து தலைவர் தேர்ந்தெடுத்துள்ளார் - ரமேஷ் குமார் பேட்டி

ஒவ்வொரு வேட்பாளரையும் மிகவும் சிந்தித்து தலைவர் தேர்ந்தெடுத்துள்ளார் - ரமேஷ் குமார் பேட்டி

APC News Tamil 1 week ago

வ்வொரு வேட்பாளரையும் சிந்தித்து தேர்ந்தெடுத்தார் தலைவர் விஜய் மக்கள் பணி செய்ய அனுப்பியுள்ளார். அடுத்த ஐந்து ஆண்டுகள் மக்களுக்காக பணியாற்றி தூய ஆட்சியை வழங்குவோம் என ஆவடியில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக்காக வேட்பாளர் ரமேஷ் குமார் பேட்டியளித்துள்ளாா்.

ஆவடி தொகுதியில் அமைச்சர் நாசரை எதிர்த்து தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்ட ரமேஷ் குமார் அமைச்சர் நாசரை விட −76,311 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலர் மாரிச்செல்வியிடம் பெற்றுக் கொண்ட அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறுகையில், "ஒவ்வொரு வேட்பாளரையும் மிகவும் சிந்தித்து தலைவர் விஜய் தேர்ந்தெடுத்தார் வெற்றிக்கு காரணம் விஜய் தான் அவருக்கு மனமார்ந்த நன்றி மக்களோடு மக்களாக மக்கள் பணி செய்ய எங்களை அனுப்பி உள்ளார் நிச்சயமாக மக்கள் பணி சிறப்பாக செய்வோம் எங்களுக்கு ஊழல் என்றால் என்னவென்றே தெரியாது நாங்கள் ஊழல் செய்ய மாட்டோம் மக்கள் பணி மட்டுமே செய்வோம் அடிப்படை வசதிகள் மிகவும் பலவீனமாக உள்ள ஆவடியை பூர்த்தி அடைந்த மாநகராட்சியக தரம் உயர்த்த அனைத்து பணிகளையும் செய்வேன்" என கூறினார்.

  1. சா.மு.நாசர் (தி.மு.க.) - 1,04,073
  2. ராஜசிம்ம மகேந்திரா (பா.ஜ.க) - 39,605
  3. புனிதா சண்முகம் (நாம் தமிழர் கட்சி) - 16,335
  4. ரா.ரமேஷ்குமார் (த.வெ.க.) - 1,80,384

5.நோட்டா - 1,533

ரமேஷ் குமார் (தவெக) 76,311 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

கும்பகோணம்: வாக்களித்த மக்களுக்கு வீதி வீதியாக சென்று நன்றி தெரிவித்த திமுக வேட்பாளர்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: APC News Tamil