Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
'ரஹ்மான் - எ ரினைசன்ஸ்': தனது சுயசரிதை புத்தகத்தை அறிவித்தார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்!

'ரஹ்மான் - எ ரினைசன்ஸ்': தனது சுயசரிதை புத்தகத்தை அறிவித்தார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்!

APC News Tamil 1 week ago

னது சுயசரிதையை எழுதிக் கொண்டிருப்பதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் (ட்விட்டர்) தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'ஒரு புதிய அத்தியாயம் தொடங்கி உள்ளது.

ரூபா சக்கரவர்த்தியுடன் இணைந்து 'ரஹ்மான் - எ ரினைசன்ஸ்' (Rahman - A Renaissance) என்ற புத்தகத்தை எழுதுகிறேன். அவர் இதன் இணையாசிரியராக இருக்கிறார்.

என்னுடைய உலகை வடிவமைத்த இசை, சிந்தனைகள், சவால்கள், ஆளுமைகள் மற்றும் படைப்பாக்க பயணம் பற்றியதாக இந்தப் புத்தகம் இருக்கும். கூடுதல் விவரங்களை விரைவில் அறிவிப்பேன்' என்று தெரிவித்துள்ளார்.

இளையராஜா உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்களிடம் பணியாற்றிய ரஹ்மான், கடந்த 1992-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'ரோஜா' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதன் பிறகு மணிரத்னத்துடனான ரஹ்மானின் சினிமாப் பயணம் இன்று வரைத் தொடர்கிறது.

தனது முதல் படத்திலேயே தேசிய விருது பெற்ற ஏ.ஆர்.ரஹ்மான், பல முறை தேசிய விருதுகள், கிராமி, கோல்டன் குளோப் உள்ளிட்ட சர்வதேச விருதுகளையும், 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்துக்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளையும் வென்று சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

"பயம் வந்தால்தான் நடிப்பேன்!" - 'ஐ அம் கேம்' விழா மேடையில் துல்கர் சல்மான் பேச்சு!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: APC News Tamil