Dailyhunt
ராமர் அவதாரத்தில் ரம்பீரின் டீசர் வெளியீடு  - ரசிகர்கள் உற்சாகம்..

ராமர் அவதாரத்தில் ரம்பீரின் டீசர் வெளியீடு - ரசிகர்கள் உற்சாகம்..

APC News Tamil 2 weeks ago

ன்பீர் கபூர் ஏற்றுள்ள ராமர் கதாபாத்திரத்தின் டீசர் வீடியோ அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அவர் தோன்றும் டீசர் வீடியோ வெளியானதும், சமூக வலைதளங்களில் வைரலாக பரவி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இந்திய திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ராமாயணா திரைப்படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ரன்பீர் கபூர் ஏற்றுள்ள ராமர் கதாபாத்திரத்தின் டீசர் வீடியோ அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

நமித் மல்கோத்ரா இயக்கத்தில் உருவாகும் இந்த பிரம்மாண்ட படத்தில், சாய் பல்லவி சீதையாகவும், யாஷ் ராவணனாகவும், சன்னி தியோல் அனுமனாகவும் நடிக்கின்றனர். முன்னணி நட்சத்திரங்கள் இணைந்துள்ளதால் இப்படத்திற்கு மிகுந்த வரவேற்பு நிலவுகிறது.

மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியிடப்பட உள்ளது. முதல் பாகம் இந்த ஆண்டு தீபாவளி திருநாளில் வெளியாகும் எனவும், இரண்டாவது பாகம் அடுத்த ஆண்டு தீபாவளியில் திரைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் மற்றும் ஹாலிவுட் இசை அமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைக்கின்றனர் என்பது கூடுதல் சிறப்பாகும்.

இந்நிலையில், ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூர் தோன்றும் டீசர் வீடியோ வெளியானதும், சமூக வலைதளங்களில் வைரலாக பரவி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இப்படம் இந்திய திரையுலகில் புதிய சாதனைகளை படைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மம்மூட்டி, மோகன்லால் இணையும் 'பேட்ரியாட்' ட்ரெய்லர் ஏப்ரல் 4 வெளியீடு…

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: APC News Tamil