Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ரவிதேஜா சினிமாவில் புதிய மைல்கல்! முதல் முறையாக ரூ.200 கோடி வசூலை கடந்த 'இருமுடி'!

ரவிதேஜா சினிமாவில் புதிய மைல்கல்! முதல் முறையாக ரூ.200 கோடி வசூலை கடந்த 'இருமுடி'!

APC News Tamil 5 days ago

டிகர் ரவிதேஜா நடிப்பில் வெளியாகியுள்ள 'இருமுடி' திரைப்படம் உலகளவில் ரூ.200 கோடி வசூல் செய்து பிரம்மாண்ட சாதனை படைத்துள்ளது.

ரவிதேஜாவின் திரைப்பயணத்தில் ரூ.200 கோடி வசூலை எட்டும் முதல் திரைப்படம் இதுவேயாகும்.

இப்படத்தின் வசூல் சாதனை குறித்து படக்குழு வெளியிட்டுள்ள செய்தியில்:

"வேறு வேறு தலைமுறைகள், வேறு வேறு திரையரங்குகள், ஒரே கொண்டாட்டம் 'இருமுடி'. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை, இளைஞர்கள் முதல் குடும்பங்கள் வரை எல்லோரும் கொண்டாடும் 'இருமுடி' திரைப்படம் மொத்தம் ரூ.200 கோடி வசூலித்துள்ளது" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.

படத்தின் சிறப்பம்சங்கள்:

  • தயாரிப்பு:மைத்ரி மூவி மேக்கர்ஸ்

  • இயக்கம்:சிவ நிர்வாணா

  • இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்

  • நடிப்பாளர்கள்:ரவிதேஜா, ப்ரியா பவானி சங்கர், சாய் குமார், சுவாசிகா உள்ளிட்ட பலர்.

கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி தெலுங்கில் 'இருமுடி' என்ற பெயரிலும், தமிழில் 'இருமுடி கட்டு' என்ற பெயரிலும் வெளியான இத்திரைப்படம், திரையரங்குகளில் குடும்ப ரசிகர்களின் பேராதரவோடு தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

ஜெயிலர் 2 ரிலீஸ் தேதியில் மாற்றமா? - படக்குழு கொடுத்த முக்கிய விளக்கம்!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: APC News Tamil