Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
'சாருகேசி' படக்குழுவை பாராட்டிய ரஜினிகாந்த்.

'சாருகேசி' படக்குழுவை பாராட்டிய ரஜினிகாந்த்.

APC News Tamil 3 days ago

டிகர் ரஜினிகாந்த், ஒய்.ஜி.மகேந்திரன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘சாருகேசி’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, படக்குழுவினரின் உழைப்பைப் பெரிதும் பாராட்டி வாழ்த்தியுள்ளார்.

மூத்த இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை அருண் விஷுவல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. E5 என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் ஜே. ஜெயகிருஷ்ணன் உலகம் முழுவதும் இப்படத்தை வெளியிடுகிறார். இசை, உணர்வு மற்றும் கலாச்சாரத்தை மையமாகக் கொண்ட இப்படம் பார்வையாளர்களுக்கு ஆழமான சினிமா அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தில் ஒய் ஜீ மகேந்திரன், சத்யராஜ் சமுத்திரக்கனி, தலைவாசல் விஜய், சுஹாசினி மணிரத்னம், ரம்யா பாண்டியன், ராஜ் அய்யப்பா மற்றும் மதுவந்தி அருண் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் தேவா இசையமைத்துள்ளார். அவரது இசை இப்படத்தின் உணர்ச்சி ஆழத்தை மேலும் உயர்த்தும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

'சாருகேசி' திரைப்படம், ஒய்.ஜி. மகேந்திரா மேடையேற்றிய புகழ்பெற்ற நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது. செவ்வியல் இசை, மனித உறவுகள், உணர்வுகள் மற்றும் கலை பாரம்பரியத்தை மையமாகக் கொண்ட இப்படம், உணர்வுப்பூர்வமான கதை சொல்லலால் ரசிகர்களை கவரும் என கூறப்படுகிறது. மேலும், 'சங்கராபரணம்' மற்றும் 'சிந்து பைரவி' போன்ற காலத்தால் அழியாத இசைத் திரைப்படங்களின் வரிசையில் இப்படமும் இடம்பிடிக்கும் என தயாரிப்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

விழாவில் பேசிய இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, திறமையான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி அளிப்பதாகவும், 'சாருகேசி' தனது மனதிற்கு மிகவும் நெருக்கமான படம் என்றும் கூறினார். நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் அருண், இயக்குநர் திருமலை, ஜே. ஜெயகிருஷ்ணன், எம்.சி.பி. ஜெயச்சந்திரன், லஹரி மியூசிக் நிறுவன பிரதிநிதிகள் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இசை, உணர்வு மற்றும் வலுவான கதைக்களத்துடன் உருவாகியுள்ள 'சாருகேசி' திரைப்படம், ஜூன் 12 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: APC News Tamil