Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் தூக்கு தண்டனையை உறுதி செய்யக் கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மனு!

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் தூக்கு தண்டனையை உறுதி செய்யக் கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மனு!

APC News Tamil 1 month ago

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் தூக்கு தண்டனையை உறுதி செய்யக வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது.

2020 ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில், ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வை ஏற்படுத்தியது. இந்த வழக்கின் விசாரணை பின்னர் சிபிஐக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம், ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது சிபிஐ உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

இதனிடையே, குற்றவாளிகள் அனைவரும் ஜூன் 1ஆம் தேதிக்குள் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், வழக்கின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு ஜூன் 4ஆம் தேதி முதல் தினந்தோறும் விசாரணை நடத்தப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய 15 நாள் சிறை விடுப்பு வழங்க வேண்டும் என குற்றவாளி ஸ்ரீதர் முன்வைத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: APC News Tamil