Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
சென்னை மாவட்ட தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிக்ளுக்கு ஒருநாள் பயிற்சி முகாம்..

சென்னை மாவட்ட தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிக்ளுக்கு ஒருநாள் பயிற்சி முகாம்..

APC News Tamil 1 month ago

சென்னை மாவட்டத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ள தேர்தல் அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

சென்னை வள்ளுவர் கோட்டம் வளாகத்தில், சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் வாக்கு எண்ணும் தேர்தல் அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி சார்பாக பயிற்சி முகாம் இன்று நடைபெற்று வருகிறது.

இந்த பயிற்சியில் தபால் வாக்குகள் மற்றும் வாக்குபதிவு இயந்திரங்கள் ஆகியவற்றில் உள்ள வாக்குகளை எவ்வாறு எண்ண வேண்டும், வாக்கு எண்ணும் போது பராமிக்ககூடிய படிவங்கள் 18, 20, 21 E, 21 C மற்றும் E, 22 உள்ளிட்ட 15 ஆவணங்கள் குறித்தும் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இந்த பயிற்சி வகுப்பில் சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் வாக்கு எண்ணும் பணியில் இருக்கும் Micro Observer (நுண் பார்வையாளர்), Counting supervisor (வாக்கு எண்ணும் கண்காணிப்பாளர்), Counting assistant (வாக்கு எண்ணும் உதவியாளர்), Counting office assistant (வாக்கு எண்ணும் அலுவலக உதவியாளர்) ஆகியோர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சி முகாமில் சென்னை மாவட்டத்தின் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் கற்பகம் தலைமையில் இந்த பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

நேற்றைய தினம் தமிழகத்தில் 38 மாவட்டங்களிலும் உள்ள தேர்தல் நடந்தும் அலுவலர்களுக்கு தேர்தல் ஆணையம் பயிற்சி வழங்கிய நிலையில், இன்றயை தினம் சென்னை மாவட்டத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியில் உள்ள தேர்தல் அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி பயிற்சி வழங்கி வருகிறது. சென்னையில் மூன்று இடங்களில் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற உள்ளது. சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 4-ஆம் தேதி எண்ணப்பட இருக்கிறது.

அமைச்சர் கே.என்.நேரு மீது எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை - ஐகோர்ட் விளக்கம்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: APC News Tamil