Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தமிழ்நாடு அமைச்சரவையில் 19 மாவட்டங்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை!

தமிழ்நாடு அமைச்சரவையில் 19 மாவட்டங்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை!

APC News Tamil 4 days ago

மிழ்நாட்டில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அமைச்சரவையில், மாநிலத்தின் மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் 19 மாவட்டங்களுக்கு எவ்வித அமைச்சர் பிரதிநிதித்துவமும் இல்லை.

சமீபத்தில் நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்கத்தைத் தொடர்ந்து, மாவட்ட வாரியான பிரதிநிதித்துவ விவரங்கள் பின்வருமாறு:

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவை விரிவாக்கம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமைச்சரவை அமைப்பில் மாவட்ட வாரியான பிரதிநிதித்துவம் குறித்த கேள்விகளும் எழுந்துள்ளன.

தமிழ்நாட்டில் மொத்தம் 38 மாவட்டங்கள் உள்ள நிலையில், தற்போது அமைக்கப்பட்டுள்ள தவெக அமைச்சரவையில் 19 மாவட்டங்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை என்பது கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது, மாநிலத்தின் சரியாக பாதி மாவட்டங்களுக்கு அமைச்சரவை பிரதிநிதித்துவமே இல்லாத சூழல் உருவாகியுள்ளது.

அமைச்சர் இல்லாத 19 மாவட்டங்கள்
நீலகிரி, நாகப்பட்டினம், பெரம்பலூர், திருவாரூர், தர்மபுரி, கரூர், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, அரியலூர், திருப்பத்தூர், திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், தென்காசி மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் இருந்து ஒருவருக்கும் அமைச்சரவை வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இந்த மாவட்டங்களில் தவெக எம்.எல்.ஏ.க்கள் இருந்தபோதிலும், அமைச்சரவை அமைப்பில் அவர்கள் புறக்கணிக்கப்பட்டதாக கட்சிக்குள் அதிருப்தி நிலவி வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக தெற்கு மற்றும் வடமேற்கு மாவட்டங்களுக்கு குறைந்த முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

சென்னைக்கு அதிக முக்கியத்துவமா?
மறுபுறம், சென்னை மாவட்டத்திற்கு அமைச்சரவையில் அதிக பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது. முதலமைச்சர் விஜய் உட்பட மொத்தம் 33 பேர் இடம்பெற்றுள்ள அமைச்சரவையில், சென்னையை சேர்ந்தவர்களே 8 பேர் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால், "ஒரே மாவட்டத்திற்கு அதிக வாய்ப்பு வழங்குவதற்குப் பதிலாக, பிற மாவட்டங்களுக்கும் சமநிலை அடிப்படையில் பிரதிநிதித்துவம் வழங்கியிருக்கலாம்" என்ற கருத்து அரசியல் விமர்சகர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசப்படுகிறது.

மாவட்ட சமநிலை குறித்த கேள்வி
தமிழக அரசியலில் மாவட்ட சமநிலை என்பது எப்போதும் முக்கிய அம்சமாக கருதப்படுகிறது. குறிப்பாக அமைச்சரவை அமைப்பில் பிராந்திய சமநிலை, சமூக சமநிலை, மாவட்ட பிரதிநிதித்துவம் ஆகியவை முக்கியமாக பார்க்கப்படும் நிலையில், தற்போதைய தவெக அமைச்சரவை அமைப்பு அந்த விவாதத்தை மீண்டும் முன்வைத்துள்ளது. அமைச்சர் பதவி கிடைக்காத மாவட்டங்களில் இருந்து எதிர்காலத்தில் மாற்றம் அல்லது விரிவாக்கம் மூலம் வாய்ப்பு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது.

தமிழ்நாடு அமைச்சரவையில் இடம்பெற உள்ள 23 பேர் கொண்ட பட்டியல் வெளியீடு!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: APC News Tamil