Dailyhunt
தவெக எம்.எல்.ஏ தகுதி நீக்கமா? - புது அரசுக்கு வந்த சோதனை

தவெக எம்.எல்.ஏ தகுதி நீக்கமா? - புது அரசுக்கு வந்த சோதனை

APC News Tamil 6 days ago

வெக சார்பில் சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ். லக்ஷ்மணனை, தகுதி நீக்கம் செய்ய கோரி ஆளுநரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் சேலம் மேற்கு தொகுதியில் தவெக சார்பில் எஸ்.லஷ்மணன் போட்டியிட்டு 1,20,407 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற தவெக சட்டமன்ற உறுப்பினர் லெட்சுமணன், தனது தேர்தல் வேட்புமனுவில், அவர் மீதான குற்ற வழக்குகள் தொடர்பான விவரங்களை மறைத்துள்ளதாக கூறி சேலத்தை சேர்ந்த மனோகர் என்பவர் ஆளுநருக்கு மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்த மனுவில், தவெக சட்டமன்ற உறுப்பினரான லெட்சுமணன், பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றிய போது, கட்டப்பஞ்சாயத்து செய்து 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றது தொடர்பாக வழக்கில் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு பணி நீக்கமும் செய்யப்பட்டவர் என குறிப்பிட்டுள்ளார்.

லஞ்சம் பெற்ற ஊழல் நடவடிக்கை பணியிழந்தது தொடர்பாக விவரங்களை வேட்புமனுவில் மறைத்து வெற்றி பெற்றுள்ளதால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் அடிப்படையில் தவெக சட்டமன்ற உறுப்பினர் லெட்சுமணனை, தகுதி நீக்கம் செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் தமிழக ஆளுநருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: APC News Tamil