Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
திமுக நிர்வாகி நில அபகரிப்பு: தலைமைச் செயலகம் எதிரே பெண் தீக்குளிக்க முயற்சி மற்றும் நடுரோட்டில் போராட்டம்

திமுக நிர்வாகி நில அபகரிப்பு: தலைமைச் செயலகம் எதிரே பெண் தீக்குளிக்க முயற்சி மற்றும் நடுரோட்டில் போராட்டம்

APC News Tamil 1 week ago

லைமைச் செயலகம் அருகே திமுக நிர்வாகி ஒருவர் தனது கோடிக்கணக்கான மதிப்பிலான சொத்தை அபகரித்துக் கொண்டதாகக் கூறி பெண் ஒருவர் திடீரென நடுரோட்டில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கத்தி கூச்சலிட்டு தரையில் புரண்டு அவர் போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சொத்து அபகரிப்பு பின்னணி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தங்களது நில ஆக்கிரமிப்பு மற்றும் சொத்து தகராறுகள் தொடர்பான புகார்களைக் கொடுக்க காவல்துறை மற்றும் அரசு அலுவலகங்களை நாடி வருவது தொடர்கிறது. இந்நிலையில், ஆளுங்கட்சியான திமுகவைச் சேர்ந்த உள்ளூர் நிர்வாகி ஒருவர் அதிகார பலத்தைக் பயன்படுத்தி தனது பூர்வீக சொட்டையும் இடத்தையும் ஏமாற்றி ஆக்கிரமித்துள்ளதாகக் கூறி பெண் ஒருவர் சென்னை தலைமைச் செயலகப் பகுதிக்கு அருகில் போராட்டத்தில் குதித்தார்.

காவல்துறையினரின் முறையான நடவடிக்கையின்மை மற்றும் ஆளுங்கட்சி பிரமுகர் என்பதால் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடுரோட்டில் போராட்டம்
தலைமைச் செயலகத்தின் அருகில் உள்ள முக்கிய சாலையில் திடீரென வந்த அந்தப் பெண், தமக்கு நீதி வேண்டும் என்று கோரி சத்தமாகக் கூச்சலிட்டார். தன் கண்முன்னே தனது சொத்து பறிபோய்விட்டதாகவும், காவல் நிலையங்களில் புகார் அளித்தும் எந்த பலனும் இல்லை என்றும் கதறி அழுதார்.

அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் திரண்டதை அடுத்து, அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. திடீரென அவர் தரையில் உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் காவல்துறையினர் உடனடியாக உஷாரடைந்தனர். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர்கள் மற்றும் காவல்துறையினர் விரைந்து சென்று அந்தப் பெண்ணை அப்புறப்படுத்த முயன்றனர்.

காவல் வாகனத்தில் கட்டாய அழைத்துச் செல்லல்
போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, போக்குவரத்தை சீரமைக்கும் பொருட்டு காவல்துறையினர் அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்று அருகில் நின்ற காவல் வாகனத்தில் ஏற்றினர். அப்போது காவல்துறையினருக்கும் அப்பெண்ணுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. “எனக்கு நியாயம் கிடைக்கும் வரை நான் நகர மாட்டேன்” என்று அவர் கதறியது காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது. போராட்டத்தில் ஈடுபட்ட மற்றொரு பெண்ணையும் காவல்துறையினர் உடன் அழைத்துச் சென்றனர்.

உடன் வந்த பெண்ணின் அதிரடிப் பேட்டி
போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட பெண்ணுடன் வந்திருந்த மற்றொரு பெண் செய்தியாளர்களை சந்தித்து விரிவான பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,

“எங்கள் குடும்பத்திற்குச் சொந்தமான கோடிக்கணக்கு மதிப்புள்ள சொத்தை திமுக நிர்வாகியான சம்பந்தப்பட்ட நபர் போலி ஆவணங்கள் மூலம் ஏமாற்றிப் பறித்துக் கொண்டார். காவல் ஆணையர் அலுவலகம் முதல் அனைத்து அதிகாரிகளிடமும் மனு அளித்துவிட்டோம். ஆனால், அவர் எதிா்க்கட்சி சேர்ந்தவர் என்பதால் காவல்துறை அவருக்கு ஆதரவாகச் செயல்படுகிறது. எங்களுக்கு நீதி கிடைக்கும் வரை நாங்கள் ஓய மாட்டோம்.என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.

தலைமைச் செயலகப் பகுதிக்கு அருகிலேயே பெண் ஒருவர் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறை கண்முன்னே போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து அரசு தரப்பில் இருந்து முறையான விசாரணை நடத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தூய்மைப் பணியாளர்கள் பணிநியமன வாக்குறுதியை தவெக அரசு நிறைவேற்ற வேண்டும்: டிடிவி தினகரன் கண்டிப்பு 'ரீல்ஸ்களுக்காகத் தூய்மை தேவதைகள் எனப் புகழ்ந்தால் வாழ்வாதாரம் உயருமா?

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: APC News Tamil