Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
வத்தலகுண்டுவில் ஏ.டி.எம்.மில் பெண்ணிடம் நூதன முறையில் ₹41,000 மோசடி: பலே ஆசாமிக்கு காவல்துறை வலைவீச்சு!

வத்தலகுண்டுவில் ஏ.டி.எம்.மில் பெண்ணிடம் நூதன முறையில் ₹41,000 மோசடி: பலே ஆசாமிக்கு காவல்துறை வலைவீச்சு!

APC News Tamil 6 days ago

.டி.எம். மையத்தில் பணம் எடுத்துத் தருவதாகக் கூறி பெண்ணை ஏமாற்றி, ஏ.டி.எம். கார்டை மாற்றி ரூ.41 ஆயிரம் மோசடி செய்த மர்ம நபரை வத்தலகுண்டு காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

நூதன மோசடி சம்பவம்
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு கண்ணகி தெருவைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மனைவி சுதா (46). இவர் வத்தலகுண்டு காளியம்மன் கோவில் அருகே மதுரை சாலையில் அமைந்துள்ள தனியார் வங்கி ஏ.டி.எம். மையத்திற்குப் பணம் எடுக்கச் சென்றுள்ளார்.

அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், சுதாவிற்கு உதவி செய்வது போல நடித்து, “நான் உங்களுக்குப் பணம் எடுத்துத் தருகிறேன்” என்று கூறியுள்ளார். அதை நம்பிய சுதா, தனது ஏ.டி.எம். கார்டை அந்த நபரிடம் கொடுத்து, இரகசிய குறியீட்டு (PIN) எண்ணையும் தெரிவித்துள்ளார்.

கார்டை மாற்றி ஏமாற்றம்
பணம் எடுப்பது போல நடித்த அந்தப் பலே ஆசாமி, சுதாவின் கவனத்தைத் திருப்பி, அவரிடம் இருந்த ஏ.டி.எம். கார்டை நைஸாக மாற்றித் தனது கைவசம் வைத்திருந்த வேறு ஒரு கார்டை சுதாவிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து தப்பினார்.

இதையடுத்து, சிறிது நேரத்தில் அருகில் உள்ள மற்றொரு ஏ.டி.எம். மையத்திற்குச் சென்ற அந்த மர்ம நபர், சுதாவின் கணக்கில் இருந்த ரூபாய் 41,000 ரொக்கப் பணத்தைச் எடுத்துக்கொண்டு தலைமறைவானார்.

காவல் நிலையத்தில் புகார்
தன்னிடம் உள்ள ஏ.டி.எம். கார்டை வைத்துப் பணம் எடுக்க முடியாமல் குழப்பமடைந்த சுதா, தான் நூதன முறையில் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அதிர்ச்சியடைந்தார். இச்சம்பவம் குறித்து அவர் உடனடியாக வத்தலகுண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த வத்தலகுண்டு காவல்துறையினர், ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி (CCTV) கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, தலைமறைவாக உள்ள மர்ம நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த ஏ.டி.எம். மோசடி சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 11,000 கன அடியாக அதிகரிப்பு: 15-வது நாளாக பரிசல் இயக்கத் தடை நீடிப்பதால் தொழிலாளர்கள் கவலை!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: APC News Tamil