Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
விமானி சாய் ரோஷன் ஷாம் என்பவரை மணந்தார் நடிகை ஜனனி!

விமானி சாய் ரோஷன் ஷாம் என்பவரை மணந்தார் நடிகை ஜனனி!

APC News Tamil 1 month ago

மிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான ஜனனி, தனது காதலரான சாய் ரோஷன் ஷாம் என்பவரை இன்று திருமணம் செய்து கொண்டார்.

அவன் இவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான ஜனனி அதே படத்தில் தனது நடிப்பிற்காக நல்ல பெயரையும் பெற்றார். அதனை தொடர்ந்து தெகிடி, பலூன், ஹாட்ஸ்பாட் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களிலும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

நடிகை ஜனனிக்கு சென்னையில் பிறந்து வளர்ந்து துபாயில் குடிபெயர்ந்து விமானியாக பணியாற்றி வரும் தனது காதலரான சாய் ரோஷன் ஷாம் என்பவருடன் கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்தது. தற்போது சாய் ரோஷன் ஷாம் – ஜனனி இருவருக்கும் குடும்பத்தினர் முன்னிலையில் மகாபலிபுரம் அருகே உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று திருமணம் நடைபெற்றது. இந்நிகழ்வில் இரு குடும்பத்தினரும், நெருங்கிய நண்பர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். நடிகை ஜனனியின் திருமண செய்தி, அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: APC News Tamil