பொழுதுபோக்கு
எப்ப பார்த்தாலும் சண்டை போட்டு ஊர காப்பாத்திட்டிருக்கோம் என்று அஜித் சொன்னார் - வெங்கட் பிரபு

மங்காத்தா படம் அஜித் ரசிகர்களுக்கு மிகவும் சிறப்பான ஒன்று. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். வணிக பொழுதுபோக்கு படமான மங்காத்தா இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. யுவன் சங்கர் ராஜாவின் இசையும், வெங்கட் பிரபுவின் திரைக்கதையும் மங்காத்தாவை அஜித்துக்கு மறக்க முடியாத படமாக மாற்றியது. படம் மாபெறும் வெற்றி பெற்றதிலிருந்தே மங்காத்தா 2 நடக்குமா என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
இந்நிலையில் இயக்குநர் வெங்கட் பிரபு சமீபத்தில் அஜித்துடன் மங்காத்தா 2 செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பேசியுள்ளார்.
அதில், "நான் எங்கு சென்றாலும், ரசிகர்கள் மங்காத்தா 2 பற்றி என்னிடம் கேட்கிறார்கள். மங்காத்தா வெளியான பிறகு எனக்கு அதுபற்றி ஒரு யோசனை வந்தது. நானும் அஜித்தும் இது பற்றி விவாதித்தோம். மங்காத்தாவின் பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு, நாங்கள் வேறு பல படங்களைப் பற்றியும் விவாதித்தோம், ஆனால் நாங்கள் இருவருமே பிஸியாகிவிட்டோம். கடைசியாக நாங்கள் சந்தித்தபோது, அவர் ஜாலியாக ஒரு பொழுதுபோக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று என்னிடம் கூறினார். தொடர்ச்சியாக அதிரடி படங்கள் செய்வதில் சோர்வாக இருப்பதாக அவர் கூறினார் (எப்ப பார்த்தாலும் சண்ட போட்டு ஊர காப்பாத்திட்டிருக்கோம்).
தற்போது வலிமை படத்தில் அஜித் நடித்து வருகிறார். நான் மாநாடு படத்தில் வேலை செய்கிறேன். அஜித் ஒரு படத்தை முடிப்பதற்கு முன்பு மற்றொரு படத்தை செய்ய மாட்டார். மங்காத்தா 2 நடக்குமா என்று அஜித் அவர்கள் தான் சொல்ல வேண்டும், அது முற்றிலும் அவரது முடிவு. வலிமை படம் இறுதி கட்டங்களை எட்டும் வரை காத்திருப்போம். ஒருவேளை அந்த நேரத்தில் இது மங்கத்தா 2 படமா அல்லது வேறு ஏதேனும் படமாக இருக்கப் போகிறதா என்று பார்ப்போம்" என்று பேசியுள்ளார்.
தற்போது வெங்கட் பிரபு எஸ்.டி.ஆர் உடன் இணைந்து மாநாடு படத்தில் பிஸியாக உள்ளார். இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், கல்யாணி பிரியதர்ஷன், கருணாகரன், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கரோனா தொற்றுநோய் காரணமாக படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
related stories
-
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் யோகிபாபுவின் 'ட்ரிப்' திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீடு !
-
சினிமா செய்தி விமல் அடுத்த படத்தில் நாயகியான பிரபல நடிகை!
-
சினிமா செய்தி 'அண்ணாத்த' சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி!