Friday, 23 Oct, 4.49 pm Asiaville Tamil

முகப்பு
ஹாட்ஸ்டாரில் வெளியாகும் மூக்குத்தி அம்மன்! அதிகாரப்பூர்வமாக ட்வீட் செய்த ஆர்.ஜே.பாலாஜி!

மூக்குத்தி அம்மன் திரைப்படம் தீபாவளிக்கு ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளதாக ஆர்.ஜே.பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஆர்.ஜே.பாலாஜி இயக்கி நடித்துள்ள மூக்குத்தி அம்மன் படத்தில் நடிகை நயன்தாரா அம்மனாக நடித்துள்ளார். எல்கேஜி பட வெற்றிக்கு பின் பாலாஜி நடிப்பில் உருவான படம் என்பதால் இன்னும் கூடுதல் எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தை பாலாஜியுடன் என்.ஜே.சரவணனனும் இணைந்து இயக்கியுள்ளார். படத்தை ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். கரோனா ஊரடங்கு காரணமாக 7 மாதங்களாக எந்த படமும் திரையரங்கில் வெளியாகாத நிலையில், பல தயாரிப்பாளர்கள் ஓடிடி தளங்களை நாடி சென்று வருகின்றனர். மூக்குத்தி அம்மன் படமும் முதலில் ஓடிடி தளத்தில் தான் வெளியாகும் என்று பேசப்பட்டது. ஆனால் அதற்கு பாலாஜி மறுப்பு தெரிவித்து வந்தார். எந்த சூழலிலும் திரையரங்கில் மட்டும் தான் மூக்குத்தி அம்மன் படம் வெளியாகும் என்று தெரிவித்தார்.

ட்விட்டரில் பாலாஜி வெளியிட்டுள்ள புகைப்படம்

இந்நிலையில், சில நிமிடங்களுக்கு முன்பு ஆர்.ஜே.பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில், தீபாவளிக்கு ஹாட்ஸ்டாரில் மூக்குத்தி அம்மன் படம் வெளியாகும் என்று தெரிவித்துள்ளனர். இதனால் இந்த தீபாவளிக்கு ஓடிடி தளத்தில் ஹாட்ஸ்டார் வைத்திருப்பவர்கள் மூக்குத்தி அம்மன் படத்தை பார்த்து ரசிக்கலாம். கரோனா வைரஸ் காரணமாக திரையரங்கள் இன்னும் முழுமையாக செயல்படத் தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Asia Ville Tamil
Top