தமிழ்நாட்டின் முக்கிய வருவாய் ஆதாரமாக விளங்கும் டாஸ்மாக் (TASMAC) ஆண்டுக்கு குறிப்பிட்ட சில நாட்கள் மட்டுமே விடுமுறை அளிக்கிறது.
அந்த வகையில், 2026 ஆம் ஆண்டுக்கான டாஸ்மாக் விடுமுறை நாட்கள் பட்டியல் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகள் மொத்தம் 8 நாட்கள் மட்டும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது 4,829 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகள் அனைத்தையும் தமிழ்நாடு அரசு நேரடியாக நிர்வகித்து வருகிறது. தினசரி சராசரியாக ரூ.100 கோடி அளவிற்கு மதுபான விற்பனை நடைபெறுகிறது. வார இறுதி நாட்களில் இந்த விற்பனை ரூ.120 முதல் ரூ.150 கோடி வரை அதிகரிக்கிறது.
பொங்கல், தீபாவளி மற்றும் புத்தாண்டு போன்ற முக்கிய பண்டிகை நாட்களில் அரசு இலக்கு நிர்ணயம் செய்து விற்பனையை அதிகரிக்கிறது. கடந்த தீபாவளி பண்டிகை காலத்தில் மட்டும் ரூ.790 கோடிக்கு மேல் மதுபான விற்பனை நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகின. இந்த விற்பனையில் சென்னையை விட மதுரை மண்டலத்தில் அதிகம், சுமார் ரூ.170 கோடி மதிப்பிலான விற்பனை நடைபெற்றுள்ளது.
மழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டாலும், பல அரசு அலுவலகங்கள் மூடப்பட்டாலும், டாஸ்மாக் கடைகள் பெரும்பாலும் திறந்தே இயங்குகின்றன. அதனால் அரசு வழக்கமாக ஆண்டுக்கு குறிப்பிட்ட 8 நாட்கள் மட்டுமே விடுமுறை வழங்குகிறது.
📅 2026 ஆம் ஆண்டுக்கான TASMAC கடை விடுமுறை நாட்கள்:
ஜனவரி 16 - திருவள்ளுவர் தினம்
ஜனவரி 26 - குடியரசு தினம்
பிப்ரவரி 1 - வடலூர் ராமலிங்கர் நினைவு நாள்
ஏப்ரல் 31 - மகாவீர் ஜெயந்தி
மே 1 - தொழிலாளர் தினம்
ஆகஸ்ட் 15 - சுதந்திர தினம்
செப்டம்பர் 26 - மிலாது நபி
அக்டோபர் 2 - காந்தி ஜெயந்தி
இந்த நாட்களில் மட்டுமே தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

