தலைவராக இருப்பது பலரின் கனவாக இருந்தாலும், ஒரு சிறந்த தலைவராக மாறுவதற்கு குறிப்பிட்ட குணாதிசயங்களும் திறன்களும் அவசியம்.
சிலர் கடினமாக முயன்றாலும் அந்தத் தலைமைத்துவ பண்புகளை பெற முடியாமல் போகலாம். ஆனால், சிலருக்கு இந்தத் திறன்கள் பிறவிக்குணமாகவே இருக்கும்.
எண் கணிதத்தின் (Numerology) படி, ஒருவரின் பிறந்த தேதி அவர்களின் ஆளுமை மற்றும் தலைமைத்துவ திறனை நிர்ணயிக்கும் முக்கிய காரணியாக கருதப்படுகிறது. ஒவ்வொரு எண்ணுக்கும் தனித்தனி அதிர்வுகள் உள்ளன. அவற்றில் சில எண்கள் இயல்பாகவே செல்வாக்கு, அதிகாரம் மற்றும் தொலைநோக்கு பார்வை போன்ற குணங்களை வழங்குகின்றன.
எண் கணிதத்தில், ஒருவரின் முழு பிறந்த தேதியை வைத்து கணக்கிடப்படும் "வாழ்க்கைப் பாதை எண்" (Life Path Number) அவர்களின் தலைமைத்துவத்தை தீர்மானிக்கிறது. இயற்கையான தலைவர்கள் அதிகாரத்தை தேடி செல்ல மாட்டார்கள்; அதிகாரம் அவர்களையே தேடி வரும். அவர்கள் தன்னம்பிக்கையுடன், தெளிவான முடிவுகளை எடுக்கும் திறன் கொண்டவர்களாகவும், மற்றவர்களை வழிநடத்தும் திறமையுடனும் இருப்பார்கள்.
🔢 எண் 1 - இயற்கையான முன்னோடிகள்
எந்த மாதத்திலும் 1, 10, 19 அல்லது 28 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் வாழ்க்கைப் பாதை எண் 1 உடையவர்களாகக் கருதப்படுகிறார்கள். இவர்கள் புதுமையை விரும்புபவர்கள், தைரியமாக முடிவெடுப்பவர்கள். சுயநினைவு, தன்னம்பிக்கை மற்றும் தனித்துவம் இவர்களின் பலம். புதிய பாதையை உருவாக்கும் திறன் இவர்களை சிறந்த தலைவர்களாக மாற்றுகிறது.
🔢 எண் 3 - ஊக்கமளிக்கும் வழிகாட்டிகள்
3, 12, 21 அல்லது 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் வாழ்க்கைப் பாதை எண் 3 உடையவர்கள். இவர்கள் பேச்சுத் திறன், படைப்பாற்றல் மற்றும் மகிழ்ச்சியான அணுகுமுறை மூலம் மற்றவர்களை ஊக்குவிப்பார்கள். கற்பித்தல் மற்றும் வழிகாட்டுதல் இவர்களின் முக்கிய பலமாகும். வார்த்தைகளால் மற்றவர்களை ஈர்க்கும் திறன் இவர்களை சிறந்த லீடர்களாக உருவாக்குகிறது.
🔢 எண் 8 - வலுவான நிர்வாகத் தலைவர்கள்
8, 17 அல்லது 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் வாழ்க்கைப் பாதை எண் 8 உடையவர்கள். திட்டமிடல், ஒழுக்கம் மற்றும் நீண்டகால இலக்குகளை அடையும் திறன் இவர்களின் முக்கிய வலிமைகள். நெருக்கடியான சூழ்நிலைகளிலும் அமைதியாக செயல்படும் திறன் இவர்களுக்கு உள்ளது. நடைமுறை சிந்தனை மற்றும் நிர்வாக திறன் இவர்களை நம்பகமான தலைவர்களாக மாற்றுகிறது.

